Connect with us

Cinema News

தமிழ் சினிமாவில் அந்த டார்ச்சரை அனுபவித்தேனா?.. நித்யா மேனன் வெளியிட்ட ஷாக்கிங் ஸ்டேட்மென்ட்!..

நடிகை நித்யா மேனனுக்கு தமிழ் சினிமாவில் பிரபல ஹீரோ ஒருவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக நித்யா மேனனின் பேட்டி ஒன்றும் சமீபத்தில் பேசியதாக பரவிய தகவல்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் நடிகை நித்யா மேனன்.

மலையாள நடிகையான நித்யா மேனன் சித்தார்த் நடித்த 180 படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். வெப்பம், மாலினி 22 பாளையங்கோட்டை, மெர்சல், ஓகே கண்மணி, 24, திருச்சிற்றம்பலம் என ஏகப்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: என்ன இப்படி ரோட்டுக்கு வந்துட்டாரு பிக் பாஸ் ஜனனி!.. லியோ படத்துல நடிச்சும் இந்த நிலைமையா?..

நித்யா மேனன் தமிழில் இணைந்து நடித்த நடிகர்கள் எல்லாமே பிரபல நடிகர்கள் என்பதால் திடீரென தீயாக பரவிய பாலியல் சீண்டல் வதந்தி தேசிய அளவில் டிரெண்டாக ஆரம்பித்தது. சில வட இந்திய மீடியாக்களில் அந்த செய்தியை உண்மையென நம்பி பரப்பிய நிலையில், டென்ஷன் ஆன நித்யா மேனன் தற்போது நான் அப்படி ஒன்றும் பேட்டி அளிக்கவில்லை என்றும் தனக்கு எந்த ஊரு தமிழ் சினிமா நடிகரும் பாலியல் டார்ச்சர் கொடுக்கவில்லை என்றும் அதிரடியாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் ஒன்றை போட்டுள்ளார்.

மேலும், ஒரு ட்விட்டர் ஐடியை ஷேர் செய்து இந்த கல்பிரிட் தான் இப்படி ஒரு வதந்தியை பரப்பியது என்றும் அந்த ட்விட்டர் ஐடியை வெளியிட்டு வெளுத்து வாங்கியுள்ளார் நித்யாமேனன்.

இதையும் படிங்க: தளபதி தரிசனத்தை விட.. லியோ பிளாக் டிக்கெட் பிசினஸ் தான் முக்கியம்!.. விஜய் ரசிகர்களா இப்படி?..

தனுஷ் நடிப்பில் வெளியால திருச்சிற்றம்பலம் படத்தில் சோபனா கதாபாத்திரத்தில் நடித்த நித்யா மேனனை பார்த்து ஏகப்பட்ட ரசிகர்கள் தங்களுக்கும் இப்படி ஒரு தோழி இல்லையே என பொறாமைப்பட்டனர்.

அந்த அளவுக்கு நடிக்கும் கதாபாத்திரங்களில் அப்படியே ஒன்றி நடிக்கக் கூடிய ஆற்றல் கொண்டவர். சமீப காலமாக வதந்திகளுக்கு முளையிலேயே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்கிற முடிவை நடிகைகள் த்ரிஷா, சாய் பல்லவி தொடங்கி வைத்துள்ள நிலையில், நித்யா மேனனும் அதிரடி காட்டியிருப்பது அனைவரையும் ஈர்த்துள்ளது.

 

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top