Cinema News
இவனுங்கள வச்சு அரசியல் பண்ணா விளங்கும்! தன் கைய வச்சே கண்ண குத்திக்கிற கதையா மாறிப்போன விஜய்
Actor Vijay: தமிழ் சினிமாவில் விஜய் ஒரு மாஸ் ஹீரோவாக வலம் வருகிறார். மாஸ் ஹீரோ என்பதையும் தாண்டி சமீபகாலமாக பிரச்சினைக்குரிய நடிகராகவும் இருந்து வருகிறார்.அதாவது அவரால் எந்த பிரச்சினை இல்லாவிட்டாலும் சுற்றி இருக்கிறவர்களால் விஜய்க்கு ஏகப்பட்ட பிரச்சினைகள் வந்தவண்ணம் இருக்கின்றன.
முதலில் சூப்பர் ஸ்டார் என்று சொல்லி அவர் மீது ஏகப்பட்ட கேள்விகள் முன் வைக்கப்பட்டன. ஆனால் அதற்கு இதுவரை விஜய் தரப்பில் இருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை. லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிலாவது அதை பற்றி பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதையும் படிங்க: செகன்ட் பார்ட்டே தேறுமான்னு தெரியல!. அதுக்குள்ள 3வது பார்ட்டா?!.. அதுவும் அந்த நடிகரா?!…
ஆனால் அதற்கும் இப்பொழுது வழியே இல்லாமல் போய்விட்டது. அளவுக்கதிகமான டிக்கெட் டிமாண்ட்களால் இசை வெளியீட்டு விழா நடத்தப்படாது என படக்குழு திடீர் அறிவிப்பை அறிவித்தது.
ஆனால் அதற்கு பின்னனியில் இருக்கும் காரணத்தை ஒரு சினிமா பத்திரிக்கையாளர் கூறினார். அதாவது ரசிகர்களை நம்பாமல் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை நம்பி இந்த வெளியீட்டு விழாவை நடத்த விஜய் திட்டமிட்டிருந்தார்.
இதையும் படிங்க: பல மாசம் ஆகியும் கிளைமேக்ஸ் வரல!.. காக்க வைத்த இயக்குனர்!.. தூக்கியெறிந்த அஜித்!..
அதாவது 234 தொகுதிகளிலும் இருக்கும் தனது மன்றங்கள் மூலமாக தல 20 டிக்கெட்கள் வீதம் ஒவ்வொரு தொகுதிக்கும் அனுப்பப்பட்டு வரவழைக்க திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் விஜயின் மன்றங்களிலேயே டிக்கெட் மோசடி நடந்திருப்பதாக தெரிகிறது.
இவர்கள் சொன்ன விலையையும் தாண்டி மன்றங்களில் இருக்கும் ஒரு சில நிர்வாகிகள் ஒரு டிக்கெட்டை 10000க்கும் 20000க்கும் விற்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இதுபோக 10000 போலி டிக்கெட்கள் கூட அச்சிடப்பட்டதாம். மேலும் காவல்துறையும் அளவுக்கதிகமாக கூட்டங்கள் கூடினால் எங்களால் எப்படி பாதுகாப்பு தரமுடியும் என்றும் கைவிரித்து விட்டார்களாம்.
இதையும் படிங்க: ஷூட்டிங்கில் அது மட்டும் இல்லன்னா சோழி முடிஞ்சது!.. வெளிவந்த ஜெயலலிதாவின் சீக்ரெட்…
இது எல்லாம் விஜய் காதுக்கு போக மிகுந்த மன வருத்தத்தில் விஜய் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதன் மூலம் தன் சொந்த மன்ற நிர்வாகிகளே இப்படியான செயலில் ஈடுபடும் போது இவர்களை வைத்து அரசியலில் நடக்கும் பெரிய மோசடிகளை விஜய் எவ்வாறு தடுக்கப் போகிறார் என்ற கருத்து பரவலாக பேசப்பட்டு வருகிறது.