ஜெயம் ரவியின் ‘இறைவன்’ படம் எப்படி இருக்கு?!.. ரசிகர்கள் சொல்வது என்ன?..

Published on: September 28, 2023
iraivan
---Advertisement---

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக சைக்கோ திரில்லர் படங்கள் உருவாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. ராம்குமாரின் இயக்கத்தில் வெளிவந்த ராட்சசன் படம் எப்போதும் ரசிகர்களுக்கு பிடித்த சைக்கோ திரில்லர் படமாக இருக்கிறது. அதேபோல், மிஷ்கினும் தன் பங்குங்கு சைக்கோ படம் எடுத்தார்.

சரத்குமாரின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘போர்த்தொழில்’ படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில்தான் ஜெயம்ரவி நடிப்பில் இறைவன் படம் இன்று வெளியாகியுள்ளது. இப்படமும் ஒரு பக்கா சைக்கோ திரில்லராக வெளிவந்துள்ளது. இந்த படத்தை வாமனன், மனிதன், என்றென்றும் புன்னகை ஆகிய படங்களை இயக்கிய அஹமத் இயக்கியுள்ளார்.

iraivan

இந்த படத்தின் டிரெய்லர் வீடியோ ஏற்கனவே வெளியாகி ரசிகர்களை அதிர வைத்தது. இப்படத்தில் சைக்கோ கொலைகாரனாக ஹிந்தி நடிகர் ரகுல் போஸ் நடித்துள்ளார். ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இந்த திரைப்படம் இன்று காலை வெளியானது. இப்படத்தின் முதல் பாதியை பார்த்த ரசிகர்கள் பலரும் சமூகவலைத்தளங்களில் இப்படம் எப்படி இருக்கிறது என பதிவிட்டுள்ளனர்.

iraivan

‘இறைவன் எந்த குளறுபடியும் இல்லாத ஒரு டார்க் கிரைம் டிராமாக வெளிவந்துள்ளது. இண்டர்வெல் பிளாக் காட்சி பெரிய சர்ப்பரஸை ஏற்படுத்திவிடுகிறது. சமீபகாலத்தில் வந்த படங்களில் ஜெயம் ரவி இதில் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். எமோஷனல் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். இரண்டாம் பாதிக்காக வெயிட்டிங்’ என ஒருவ பதிவிட்டுள்ளார்.

iraivan

முதல் பாதி நன்றாக இருக்கிறது.. மெதுவாக போவதால் சில காட்சிகளை கணிக்க முடிகிறது.. நிறைய காட்சிகளில் ரத்தம் தெறிக்கிறது. பெரியவர்கள் மட்டும் பார்ப்பது நல்லது’ என ஒருவர் பதிவிட்டுள்ளார். சைகோ வேடத்தில் ரகுல் போஸ் சிறப்பாக நடித்திருக்கிறார். படம் மெதுவாக போகிறது. பின்னணி இசை நன்றாக இருக்கிறது. இடைவேளை காட்சியில் வரும் டிவிஸ்டை கணிக்க முடிகிறது’ என ஒருவர் பதிவிட்டுள்ளார்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.