Cinema History
அந்த ஒரு காட்சி! ரியாலிட்டியை வெளிப்படுத்த இப்படியெல்லாம் பண்ணாரா? சிவாஜி பகிர்ந்த ரகசியம்
Sivaji Ganesan: தமிழ் சினிமாவில் ஒரு ஒப்பற்ற நடிகராக இருந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். தான் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கு தன் நடிப்பின் மூலம் உயிர் கொடுத்தவர். எப்படியெல்லாம் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு தன்னை தயார்படுத்துவார் என்பதை தன்னுடைய கதாநாயகனின் கதை என்ற நூலில் எழுதியிருந்தார் சிவாஜி.
பல வரலாற்றுக் கதைகளில் நடித்த சிவாஜிக்கு கப்பலோட்டிய தமிழன் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது. கதைப்படி பாரதியார் இறந்ததை அறிந்து வ உ சி கதறி ஓ என அழ வேண்டும்.
இதையும் படிங்க : ஒருபக்கம் காட்டினாலும் செம ஒர்த்து!.. இளசுகளை இம்சை பண்ணும் தனுஷ் பட நடிகை….
மேலும் 60வயது மதிக்கத்தக்க வ உ சியாகவும் தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கான மேக்கப்களையும் போட்டுக் கொண்டு அஞ்சா நெஞ்சம் கொண்ட வ உ சி எப்படி அழுவார் என்பதையே யோசித்துக் கொண்டிருந்தாராம் சிவாஜி.
படப்பிடிப்பு நாள் வந்தது. வெறுமனே கதறி அழுதால் பிரயோஜனம் இருக்காது. உண்மையான உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் மனதில் ஓடிக் கொண்டே இருந்ததாம்.
இதையும் படிங்க: பிருத்விராஜின் வாழ்க்கையையே மாற்றிய ரேவதி!.. இவ்வளவு நடந்திருக்கா?!.. அவர் மட்டும் இல்லனா!..
ஷார்ட் ரெடியானதும் சிவாஜியை அழைத்திருக்கிறார்கள். கேமராவின் முன் நிற்க மனதில் அந்த கதாபாத்திரத்தை உருவகப்படுத்திக் கொண்டிருந்த சிவாஜிக்கு அந்த பாவம் வரவில்லையாம். ஆனால் கேமரா ஓடிக் கொண்டே இருந்ததாம்.
திடீரென சிவாஜி அவரையே அறியாமல் ஒரு வேகத்தில் உணர்ச்சி பொங்க மனதில் தேக்கி வைத்த சோகத்தை அழுகை கொட்டித் தீர்த்தாராம். ஆனால் நிச்சயமாக அது நான் நடித்தேன் என்று சொல்ல முடியாது. கடவுள்தான் அப்போது எனக்கு உதவி செய்தார் என்று அந்த நூலில் சிவாஜி எழுதியிருக்கிறார்.
இதையும் படிங்க: யாருமே இல்லாத கடையில டீ ஆத்துன கதையா போச்சா… தர்பார் ப்ளாப்புக்கு காரணம் இதுதானா?
காட்சி எல்லாம் முடிந்து டைரக்டர் கட் சொல்லுவார் என்றால் அவரும் அழுது கொண்டே இருந்தாராம். இதிலிருந்து வேடத்தை பற்றியும் காட்சி பற்றியும் நடிப்பதற்கு முன்பே கூடுமானவரை சிந்தித்துப் பார்ப்பது நல்லது என சிவாஜி அந்த நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.