Nayanthara: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தமிழ், தெலுங்கு, தற்போது ஹிந்தி என மற்ற மொழி படங்களிலும் தன்னுடைய அஸ்திவாரத்தை போட்டு வருகிறார். திருமணமாகும் முன்புவரை சினிமாவே கதி என்று இருந்த நயன் திருமணத்திற்கு பிறகு பிசினஸ் லெவலில் பல திறமைகளை கையாண்டு வருகிறார்.
சமீபத்தில் சொந்தமாக விளம்பர கம்பெனி ஆரம்பித்து அதில் தானே நடித்து தன்னுடைய பொருள்களுக்காக விளம்பரம் செய்து வந்தார். இதற்கு முன்பு அபார்ட்மெண்ட்கள் கட்டி அதன் மூலம் பிசினஸ் செய்து வருவதாக செய்திகள் வெளியாகின.
இதையும் படிங்க: கவர்ச்சி காட்டி காசு பார்த்த 5 நடிகைகள்!.. சத்தமே இல்லாம சாதிச்சி காட்டிய சமந்தா…
எப்படியோ பணத்தை பல வழிகளில் பெருக்க பல முயற்சிகளை செய்து கொண்டு வருகிறார் நயன்தாரா. திருமணத்திற்கு பிறகும் ஹீரோக்களுடன் டூயட் ஆடிக் கொண்டு வருகிறார். ஒரு சில நடிகைகளின் கெரியர் திருமணத்திற்கு பிறகு முடிந்து விடும்.
ஆனால் நயனுக்கு திருமணத்திற்கு பிறகுதான் உச்சம் பெற்று வருகிறது. கைவசம் ஏராளமான படங்களை வைத்துக் கொண்டு சுற்றி வருகிறார் நயன். சமீபத்தில் ஷாரூக்கானுக்கு ஜோடியாக ஜவான் படத்தில் ஒரு ஆக்ஷன் ஹீரோயினாக ரசிகர்களை கவர்ந்தார்.
இதையும் படிங்க: வடிவேலு அப்பவே அப்படிப்பட்ட ஆளு! என்னங்கடா இது? பல திடுக்கிடும் தகவலை பகிர்ந்த ஹீரோயின்
அதன் பிறகு சில தினங்களுக்கு முன் ரிலீஸ் ஆன இறைவன் படத்திலும் நயன் நடித்திருந்தார். ஜெயம் ரவியுடன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்த நயன் இதற்கு முன் தனிஒருவன் படத்தில் நடித்திருப்பார்.
அந்த படத்தில் பட முழுக்க வரும் நயனுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரமும் கனமான பாத்திரமாக இருக்கும்.ஆனால் இந்த இறைவன் படத்தில் நயன் இரண்டு மூன்று சீன்களில் மட்டும்தான் வருகிறார்.
அதுகூட தேவையில்லை என்பது போலத்தான் தெரிகிறது. அதற்கு நயனுக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் 8 கோடியாம். இதற்கு 8 லட்சத்துக்கு ஏதாவது ஒரு நடிகையை போட்டு படத்தை எடுத்திருக்கலாம். இது மேலும் படத்தின் பட்ஜெட்டை அதிகரித்து விட்டது என்று சிலர் கூறுகிறார்கள்.
இதையும் படிங்க: முதல் படமே சூப்பர் ஹிட்… ஆனாலும் சோகத்தில் இருந்த கார்த்திக்!.. ஐயோ பாவம் மனுஷன்!..
