Cinema News
சிறகடிக்க ஆசை: ரவியை அசிங்கப்படுத்திய மனோஜ்… சப்போர்ட்டுக்கு வந்த முத்து… அம்மா மீது கடுப்பில் ரோகினி!..
Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் நாளைக்கு நான் பார்த்த பொண்ணை வர சொல்றேன் எனச் சொல்லிவிட்டு விஜயா செல்கிறார். அதை தொடர்ந்து அண்ணாமலை முத்துவிடம் ரவிக்கு நான் பார்த்த பொண்ணு தான் செட் ஆகல. அவ பார்த்த பொண்ணாவது வரட்டும் என்கிறார்.
மீனாவிடம் சென்ற விஜயா நாளைக்கு முத்துவை வெளியில் அனுப்புமாறு கூறுகிறார். அதை கேட்டுவிட்டு உள்ளே வரும் முத்து நாளைக்கு வெளியில போகதான் நினைச்சேன். இப்போ கேன்சல் பண்ணிட்டேன். அப்படி நாளைக்கு யாரு வரானு பார்க்குறேன் என்கிறார்.
இதையும் படிங்க: பாக்கியலட்சுமி: சித்தாவாக பாக்கியா வீட்டிற்குள் நுழைந்த சித்தார்த்… பிரச்னையை சரி செய்ய எழில் எடுத்த முடிவு..!
இதை தொடர்ந்து ரோகினி தன்னுடைய அம்மாவை பார்க்க செல்கிறார். நான் போன இந்த பையன் நிலைமை என்ன? எப்போ வீட்டுல சொல்வ என்கிறார். ஏற்கனவே பல பிரச்னை இருக்கு நீ சும்மா இரு என சத்தம் போடுகிறார். அதான் கல்யாணம் ஆகிட்டுல. இப்போ சொல்லிடலாம்ல உண்மைய எனக் கேட்கிறார்.
நான் வேணும்னு முத்து, மீனாக்கிட்ட பேசவா எனக் கேட்கிறார். அவங்களாம் உதவி பண்ண மாட்டாங்க எனக் கோபத்தில் தட்டை விசிறி அடிக்கிறார். மறுநாள் காலையில் ஸ்ருதி மாடர்ன் உடையில் கிளம்பி வர புடவை கட்டி வருமாறு கட்டாயப்படுத்துகிறார்கள். அவரும் புடவையில் கிளம்பி வருகிறார். ரவி வீட்டில் அவரை காண பெண் வீட்டில் வருவதால் லீவ் போடுமாறும் கூற அதிர்ச்சி அடைகிறார்.
இதையும் படிங்க: பல மாசம் ஆகியும் கிளைமேக்ஸ் வரல!.. காக்க வைத்த இயக்குனர்!.. தூக்கியெறிந்த அஜித்!..
மனோஜை ஹோட்டல் ரிசப்ஷனில் உட்கார வைத்திடு என கலாய்க்கிறார் முத்து. நான் ஏன் உட்காரணும் எனக் கோபப்படுகிறார் மனோஜ். ரோகினி போல பணக்கார பெண் வந்துவிட்டால் தனக்கு மரியாதை இருக்காது என்பதால் ரவி ஒரு சமையல்காரன் தானே அவனுக்கு எதுக்கு பணக்கார வீட்டு பெண் என தவறாக பேசுகிறார். உடனே முத்து மீனா தன்னிடம் சொன்ன சமையல் குறித்த டயலாக்கினை அடித்து விடுகிறார்.
அண்ணாமலை நீ மட்டும் பெருசுனு நினைக்காத என அறிவுரை வழங்குகிறார். மனோஜ் நான் மூளைக்காரன் எனக் கூற முத்து உன்னோடது திருட்டு மூளை என்கிறார். ரவி இவங்க எந்த பொண்ணு வேணாம் பார்க்கட்டும். ஆனா அப்பாவை அந்த குடும்பம் மதிக்கணும் என்பதுடன் எபிசோட் முடிவடைந்தது.