Connect with us
kann

Cinema History

எம்ஜிஆர் பாட்டுக்கு வந்த சோதனை! வாலி எழுதிய பாடலை அபத்தம் என்று சொன்ன கண்ணதாசன்!

Kannadhasan: கண்ணதாசன் தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் கவியரசராக அனைவரையும் கவி மழையில் நனைய வைத்தவர். இவரது பாடல் வரிகள் காலத்தை தாண்டியும்  நிலைத்து நிற்பவை.

இப்போதும் இவரது பாடல்களை விரும்பி கேட்பவர்கள் பலர் உண்டு. இவர் எழுதிய பாடல் வரிகளில் இருக்கும் சிந்தனை பலரையும் சிந்திக்க வைப்பவை ஆகும். இவ்வாறு தமிழ் சினிமா கவிஞர்களில் மிகவும் புகழ் பெற்ற கவிஞராக இருந்தார் கண்ணதாசன்.

இதையும் படிங்க: சேலைக்குனு தனி அபார்ட்மெண்டா? ரகசியங்களை பகிர்ந்து ரசிகர்களின் வயித்தெறிச்சலுக்கு ஆளான ரட்ஷிதா

அப்படி கோலோச்சி இருக்கும் போது அவருக்கு போட்டியாக கவிஞர் வாலி அடியெடுத்து வைத்தார். இருவருக்கும் இடையில் தொழில் முனையில் ஏகப்பட்ட போட்டிகள் இருந்தன.

பாட்டாலேயே பதிலடி கொடுத்தும் வந்தனர். ஆனால் பழகுவதில் இருவரும் சகோதரர்களைப் போலவே பழகிவந்தார்கள். இந்த நிலையில் கவிஞர் வாலியின் பாட்டில் அபத்தம் இருப்பதாக ஒரு சமயம் கண்ணதாசன் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: செகண்ட் சிங்கிள் லேட்டானதுக்கு காரணம் இதுதானா? அனிருத்துக்கும் விஜய்க்கும் இடையே இப்படி ஒரு மோதலா?

எம்ஜிஆர் படத்தில் அமைந்த ஒரு பாட்டில் சரோஜா தேவி கட்டிலில் படுத்து  எம்ஜிஆரை நினைத்து பாடும் பாடலாம். அதில்  ‘அவன் ஒரு நிலவு’ என்ற வரியை ராமசந்திரன் என்ற பெயருக்காக வாலி எழுதியிருக்கிறார். அதை ரிக்கார்டு எல்லாம் செய்துவிட்டார்களாம்.

அப்போது ஒரு சமயம் விஸ்வநாதன் கண்ணதாசனிடம் இந்த பாடல் வரியை பாடிக் காட்டினாராம். உடனே கண்ணதாசன் இது என்னய்யா ஒரு ஆண்பாலை எப்படி நிலா என்று சொன்னான் அந்த வாலி? ஒரே அபத்தமா இருக்கே? என்று கேட்டாராம்.

இதையும் படிங்க: ரசிகர்கள் கத்தினது வீண் போகல!.. அட விஜயே தேதியோட சொல்லிட்டாரே!.. வெளியாகும் லியோ டிரெய்லர்…

இதை வாலியிடம் வந்து விஸ்வநாதன் கூற நான் கண்ணதாசனிடம் பேசிக் கொள்கிறேன் என்று வாலி கூறியிருக்கிறார். அதன் பிறகு கண்ணதாசன், வாலி, விஸ்வநாதன் ஆகியோர் மூவரும் பேசிக் கொண்டிருந்தார்களாம்.

குலமகள் ராதை என்ற படத்திற்காக கண்ணதாசன்  ‘பகலிலே சந்திரனை பார்க்கப் போனேன். அவர் இரவிலே வருவதாக சொன்னான் ’ என ஒரு பாடலை எழுதியிருக்கிறார். அதை குறிப்பிட்டு வாலி கண்ணதாசனிடம் ‘ நீர் மட்டும் சந்திரனை ஆண்பாலாக நினைத்து எழுதியிருக்கிறீர்’ என்று கேட்டாராம்.

அதற்கு கண்ணதாசன் யோவ் அது குலமகள் ராதை படத்தில் சிவாஜியின் கதாபாத்திரத்தின் பெயர் சந்திரன் என்று கூறினாராம்.இப்படி இருவரும் அவரவர் பாட்டில் உள்ள பிழைகளை திருத்தம் செய்து நட்பும் பாராட்டி வந்திருக்கிறார்கள்.

google news
Continue Reading

More in Cinema History

To Top