18 நாட்களில் முடிக்கப்பட்ட படம்… எம்.ஜி.ஆர் ராசியால் 100 நாட்கள் ஓடிய அதிசயம்.. என்ன படம் தெரியுமா?

Published on: October 3, 2023
---Advertisement---

MGR: எம்.ஜி.ஆர் எப்போதுமே தன்னுடைய தயாரிப்பாளர்கள் பிரச்னையில் சிக்க கூடாது என்பதில் உறுதியாக இருப்பவர். அப்படி ஒரு படத்துக்காக எம்.ஜி.ஆர் 18 நாட்களில் படத்தினை முடித்து அதை 100 நாட்கள் ஓடவும் செய்து இருக்கிறார். அந்த படம் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

நாடகத்தில் நடித்து வந்த எம்.ஜி.ஆர் சினிமாவில் எண்ட்ரி கொடுத்து 11 வருடம் கழித்தே ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். ஆனால் இன்று வரை உள்ள மற்ற நடிகர்களை போல இல்லாமல் எம்.ஜி.ஆரின் வளர்ச்சி அபரிமிதமானது. எம்.ஜி.ஆர் நடித்த 136 படங்களில் 100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி கண்டவை மட்டும் 86 படங்களாகும். இயக்குனர் ப. நீலகண்டன் எம்.ஜி.ஆரின் 17 படங்களை இயக்கியுள்ளார்.

இதையும் படிங்க:ஆடியோ லாஞ்ச் போனா என்ன!.. ரசிகர்களை சந்திக்க வரும் விஜய்!.. பெரிய சம்பவத்துக்கு ரெடியாகும் தளபதி…

ஜெயலலிதா 28 படங்களில் நாயகியாகவும், சரோஜா தேவி 26 படங்களில் நாயகியாகவும் எம்.ஜி.ஆருடன் நடித்துள்ளனர். எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த முதல் படம் ராஜகுமாரி. முதல் திரைப்படமான சதிலீலாவதி வந்து ஏறத்தாழ பதினொரு ஆண்டுகள் பின்பே கதாநாயகனாக எம்.ஜி.ஆர் நடித்திருந்தார். இப்படத்தினை இயக்கிய ஏ.எஸ்.ஏ.சாமியே வசனமும் எழுதினார்.

முதலில் இப்படத்தில் பு. உ. சின்னப்பா தான் ஹீரோவாக நடிக்க இருந்தார். ஆனால் இயக்குனர் எம்.ஜி.ஆர் நடித்த முருகன் படத்தினைப் பார்த்து எம்.ஜி.ஆருக்கு வாய்ப்பு கொடுத்தார். 1947 வெளிவந்த இப்படம் எம்.ஜி.ஆரின் வாழ்க்கையே மாற்றியது. நடிகராக மட்டுமல்லாமல் பன்முகம் கொண்டவர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர் தன்னுடைய ஒரு படத்தின் படப்பிடிப்பை 18 நாட்களில் முடித்து விட்டார்.

பின்னர் வெளியான அப்படம் 100 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது. 1966ம் ஆண்டு தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான இப்படத்தின் பெயர் முகராசி. எம்.ஏ.திருமுகம் இயக்கிய இந்த படத்தில் எம்.ஜி.ஆர், நம்பியார், ஜெயலலிதா, ஜெயந்தி நடித்திருந்தனர். இந்த படத்தில் ஜெமினி கணேசன் எம்.ஜி.ஆருடன் இணைந்து முதல்முறையாக நடித்தார்.

இதையும் படிங்க:ரசிகர்கள் கத்தினது வீண் போகல!.. அட விஜயே தேதியோட சொல்லிட்டாரே!.. வெளியாகும் லியோ டிரெய்லர்…

அனைத்து பாடல்களையும் கண்ணதாசன் எழுத கே.வி.மகாதேவன் இசையமைத்தார். அரசியலில் புகழில் எம்.ஜி.ஆர் இருந்ததால் இந்த படத்தினை உடனே முடிக்க வேண்டிய காட்டாயத்தில் தான் 18 நாட்களில் ஷூட்டிங் முடிந்தது. அந்த வருடத்தில் வெளியான வெற்றிப்படங்களின் லிஸ்ட்டில் முகராசியும் இடம் பெற்றது. இப்படத்தினை தயாரித்தவர் எம்.ஜி.ஆரின் பால்ய கால நண்பரும் தயாரிப்பாளருமான சின்னப்ப தேவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.