தலைவர் 170 பூஜை போட்டாச்சு!.. ரஜினி பக்கத்துல பாருங்க நம்ம துணிவு ஹீரோயின் தூளா நிக்குறாங்க!..

Published on: October 4, 2023
---Advertisement---

ஜெய்பீம் இயக்குனர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பு இன்று காலை பூஜையுடன் தொடங்கிய நிலையில், அதன் புகைப்படங்களை தற்போது லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளனர்.

தலைவர் 170 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது. அதற்காக நேற்று நடிகர் ரஜினிகாந்த் கேரளாவுக்கு சென்ற நிலையில் விமான நிலையத்தில் அவர் வந்த காட்சிகளும், கேரளாவில் உள்ள ஹயாத் ரெசிடென்சி ஹோட்டலில் அவர் தங்கிய காட்சிகளும் வெளியாகின.

இதையும் படிங்க: ஒரு மாதத்தில் மூணு படத்தின் ரிலீஸ்… வருஷத்துக்கு 28 படம் நடித்த அந்த கோலிவுட் நடிகை… அடத்தூள்..!

இந்நிலையில் தற்போது தலைவர் 170 படத்தின் படபூஜை ஸ்டில்களில் வெளியாகி இந்திய அளவில் டிரெண்ட் ஆகி வருகின்றன. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இந்த பட பூஜையில் இயக்குனர் த.செ. ஞானவேல், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் துணிவு படத்தில் நடித்த பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

தலைவர் 170 படத்தில் ரஜினியுடன் இணைந்து அமிதாபச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, துஷாரா விஜயன் மற்றும் ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், திருவனந்தபுரத்தில் நடந்த படபூஜை விழாவில் கூட மஞ்சு வாரியாரை தவிர்த்து பகத் பாசில் உள்ளிட்ட யாருமே கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பட்ஜெட்டே இத்தனை கோடிதான்!. இதத்தான் பிரம்மாண்ட படம்னு சொன்னியா தலைவா?!..

புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பில் நடிகர் பகத் பாஸில் இருந்து வரும் நிலையில், கூடிய விரைவிலேயே இந்த படத்தில் பங்கேற்பார் என்றும் ரஜினிகாந்த் மற்றும் மஞ்சுவாரியர் போஷன் தான் முதலில் படமாக்கப்பட உள்ளதாகவும் கூறுகின்றனர்.

அமிதாபச்சன் நடிக்க உள்ள காட்சிகள் மும்பையில் படமாக்கப் படலாம் என்றும் கருத்துக்கள் வெளியாகியுள்ளன. அக்டோபர் மாதத்தின் தலைவர் 170 திரைப்படம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், 2024 சம்மருக்கு சூப்பர் ஸ்டார் சம்பவம் செய்ய போகிறாரா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

ஏற்கனவே பொங்கல் பண்டிகையும் நடிகர் ரஜினிகாந்த் லால் சலாம் படத்தின் மூலம் புக் செய்து விட்டது குறிப்பிடத்தக்கது.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.