ஜெயிலர் மாஸ் ஹிட் அடிச்சும் சம்பளத்தை குறைத்து வாங்கிய ரஜினி!.. தலைவருக்கு ஒரு கணக்கு இருக்கு!

Published on: October 4, 2023
rajini
---Advertisement---

Thalaivar 170: தமிழ் சினிமாவில் 30 வருடங்களுக்கும் மேல் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இன்னமும் இவரின் சாதனைகளை யாராலும் முறியடிக்க முடியவில்லை. பல வருடங்களாகவே தமிழில் அதிக சம்பளம் வாங்கிய நடிகர்களில் ரஜினிதான் இருந்தார். ஆனால், சந்திரமுகி படத்திற்கு பின் ரஜினி நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை.

இதில் 2.0 படம் மட்டுமே நல்ல வசூலை பெற்றது. எந்திரன், சிவாஜி, பேட்ட ஆகிய படங்கள் ஓரளவுக்கு வசூலை பெற்று தோல்வி பட லிஸ்டில் இடம் பெறாமல் தப்பித்தது. பாபா, குசேலன், லிங்கா, தர்பார், அண்ணாத்த ஆகிய படங்கள் ரசிகர்களை கவரவில்லை. எனவே, இந்த படங்கள் ஹிட் அடிக்கவில்லை.

இதையும் படிங்க: தலைவர் 170 பூஜை போட்டாச்சு!.. ரஜினி பக்கத்துல பாருங்க நம்ம துணிவு ஹீரோயின் தூளா நிக்குறாங்க!..

சினிமாவை பொறுத்தவரை வெற்றி மட்டுமே பேசும். அதேபோல், முந்தைய படத்தின் வெற்றியையும், லாபத்தையும் வைத்தே ஒரு நடிகரின் சம்பளமும் நிர்ணயிக்கப்படும். தொடர் தோல்விகளால் ரஜினியின் சம்பளம் குறைந்து போனது. ஒரு பக்கம் விஜயின் சம்பளம் அதிகரித்துக்கொண்டே சென்றது.

அதனால்தான் ஜெயிலர் படத்துக்கு ரஜினி ரூ.80 கோடியும், லியோ படத்திற்கு ரூ.125 கோடியையும் விஜய் சம்பளமாக பெற்றனர். அதேபோல், 65 கோடி முதல் 70 கோடி வரை சம்பளம் வாங்கி வந்த அஜித் விடாமுயற்சி படத்திற்கு ரூ.100 கோடி சம்பளம் பெற்றார். அதேநேரம், ஜெயிலர் படம் மாபெரும் வெற்றி பெற்றதால் ரஜினிக்கு விலை உயர்ந்த காரும், ரூ.30 கோடியை அன்பளிப்பாகவும் சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன் கொடுத்தார்.

இந்நிலையில், லைக்கா நிறுவனம் தயாரிக்கும் தலைவர் 170 படத்திற்காக ரஜினி ரூ.90 கோடியை மட்டுமே சம்பளமாக பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. இது பழைய கமிட்மெண்ட் எனவும், தனது மகள் ஐஸ்வர்யா இயக்கிய லால் சலாம் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க முன்வந்ததாலும் ரஜினி தனது சம்பளத்தை குறைத்து கொண்டார் எனவும் சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: பட்ஜெட்டே இத்தனை கோடிதான்!. இதத்தான் பிரம்மாண்ட படம்னு சொன்னியா தலைவா?!..

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.