Connect with us

latest news

சேட்டைப்பிடிச்ச லோகி முதல் வெல்கம் பேக் அனுஷ்கா வரை… இந்த வார அக்டோபர் ஓடிடி ரிலீஸ்..!

OTT Release: தமிழ் திரையரங்கினை தாண்டி தற்போது சினிமா ரசிகர்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்தும் இடமாகி இருக்கிறது ஓடிடி. பொறுமையாக வரும் நல்ல பிரிண்ட்டில் வீட்டுல உட்கார்ந்து பார்த்துக்கலாம் என சொல்லும் காலம் தான் தற்போது அதிகமாகி இருக்கிறது.

கடந்த வாரம் பல மொழிகள் நிறைய படங்கள் ரிலீசானதால் இந்த வாரத்தில் செம ட்ரையாகி விட்டது. பெரிய படங்களின் ரிலீஸும் இல்லை தமிழ் படங்களின் ரிலீஸும் இல்லை என்பது கொஞ்சம் கவலையான தகவலாக மாறி இருக்கிறது.

இதையும் படிங்க: பாக்கியலட்சுமி: செழியனை ப்ளாக்மெயில் செய்து தன் கைப்பிடியில் வைத்த மாலினி…! கோபிக்கு வந்த பெரிய ஆப்பு!

குஃபியா: விஷால் பரத்வாஜின் ஸ்பை த்ரில்லர் திரைப்படமாக உருவாகி இருக்கிறது குஃபியா. அமர் பூஷனின் எஸ்கேப் டு நோவேர் என்ற உளவு நாவலை அடிப்படையாகக் கொண்டது. அலி ஃபசல், வாமிகா கபி, ஆஷிஷ் வித்யார்த்தி மற்றும் அஸ்மேரி ஹக் பதோன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் நெட் ப்ளிக்ஸில் ரிலீஸாக இருக்கிறது.

லோகி சீசன் 2: அவெஞ்சர்ஸின் தாரின் தம்பியாக வரும் லோகி குறும்புக்கார கடவுள் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பெரும்பாலும் அவெஞ்சர்ஸ் படத்தில் வில்லனாக வரும் அவரை ஹீரோவாக்கி வெளிவந்து இருக்கும் சீரிஸ் லோகியின் இரண்டாம் பாகம் இந்த வாரம் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக இருக்கிறது.

மும்பை டைரிஸ் சீசன் 2: மும்பை வெள்ளத்தில் போராடிய மருத்துவ துறையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த சீரிஸை நிகில் அத்வானி இயக்கி இருக்கிறார். கொங்கனா சென் ஷர்மா, ஸ்ரேயா தன்வந்தரி, நடாஷா பரத்வாஜ், சத்யஜீத் துபே, சோனாலி குல்கர்னி ஆகியோர் நடித்துள்ள இந்த சீரிஸ் அமேசான் ப்ரைமில் ரிலீஸாக இருக்கிறது.

இதையும் படிங்க: சிறகடிக்க ஆசை: ரவியை கத்திவிட்டு செல்லும் ஸ்ருதி… விஜயாவிடம் மாட்டிக்கொண்டு முழிக்கும் ரோகிணி…

மிஸ் ஷெட்டி மிஸ்டர். பொலிஷெட்டி: அனுஷ்கா ஷெட்டி பல வருடம் கழித்து மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்திருக்கும் படம். மகேஷ் பாபு பசிகொல்லா எழுதி இயக்கிய இப்படம் சமீபத்தில் திரைக்கு வந்து சுமாரான கருத்துக்களை பெற்றது. இந்த திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாக இருக்கிறது.

Continue Reading

More in latest news

To Top