எப்பவும் கஞ்சா சிகரெட்டு கத்தி துப்பாக்கி!.. லோகேஷ் பக்கம் ரூட்டை திருப்பிய புளூசட்டமாறன்…

Published on: October 5, 2023
---Advertisement---

Bluesattai Maran: தமிழ் சினிமா படங்களுக்கு விமர்சனம் சொல்லி தனக்கென ஒரு இடத்தினை உருவாக்கி வைத்து இருப்பவர் தான் ப்ளூசட்டை மாறன். எப்போ பார்த்தாலும் நெகட்டிவாக பேசியே தன் பெயரை வளர்த்து கொண்டார். தற்போது இன்னொரு ஒரு ரூட்டையும் பிடித்து இருக்கிறார்.

தமிழ் திரைப்படங்களுக்கு ரிவியூ சொல்வது ஒரு வகை என்றால் அவர்கள் எடுத்திருக்கும் படத்தினை கழுவி ஊற்றியே ரிவியூ செய்வது இவர் ரகம். அப்படி இவர் ரிவியூ செஞ்ச படங்களின் நடித்திருந்த பிரபலங்கள் இவரிடம் சண்டைக்கு வருவார்கள். அப்போ இவருக்கு ஒரு புகழ் கிடைக்கும் என்பதாலே இப்படி செய்வதாக பேச்சுகள் இருக்கிறது.

இதையும் படிங்க: கிணத்தயே மறைச்சிருக்காங்கே! ‘லியோ’வில் மெயின் வில்லனே இவர்தானாம்! ஆண்டவரே இதுக்குத்தானா?

படம் எடுங்க அப்போ அவங்க வலி தெரியும் என சொன்னதற்காகவே ஆண்ட்டி-இந்தியன் என்ற படத்தினை எடுத்தார். படம் சுமாரான விமர்சனம் கூட பெறாமல் இருந்த இடம் தெரியாமல் போனது. மீண்டும் ரிவியூவில் இறங்கியவர். கொஞ்ச நாளுக்கு மேலாக சமூக வலைத்தளத்தில் கோலிவுட்டுக்கு எதிராக காய் நகர்த்தியே தன்னுடைய காரியத்தினை சாதித்து வருகிறார்.

சமீபத்தில் காவேரி பிரச்னைக்கு எந்த கருத்தினையும் கூறாத கோலிவுட் ஸ்டார்ஸ் அனைவரையுமே கலாய்த்து போஸ்ட் போட்டு இருந்தார். தற்போது லியோ படத்தின் ட்ரைலர் ரிலீஸாக இருப்பதால் வைரலாகி வரும் அந்த விஷயத்தில் தன் கவனத்தினை மாற்றி வருகிறார்.

அர்ஜூனின் புதிய போஸ்டரை வெளியிட்டு இருக்கும் அவர் லோகேஷ் எப்போதுமே போதைப்பொருளை ஊக்குவிக்கிறார். அர்ஜூன், விஜய் மாதிரி நடிகர்கள் இதனால் ஏற்படும் பிரச்னையை யோசிக்காமல் காசுக்காக நடிக்கின்றனர் என சாடி இருந்தார். இதனை ரீட்வீட் செய்த சிலர் போஸ்டரை ஷேர் செய்து இருக்கிறார்.

இதையும் படிங்க: சம்பளமே முக்காவாசி முழுங்கிட்டா படத்த எப்படி எடுக்க?!.. தலைவர் 170, தளபதி 68-ல் நடப்பது இதுதான்!..

மேலும் தொடர்ச்சியாக லோகேசை வம்பு வழக்கும் நோக்கோடு அவர் வெளியிட்டு இருக்கும் ட்வீட்களை பார்க்கும் போது இவர் திருந்தவே மாட்டார் போலவே பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனால் கண்டிப்பாக லியோ ரிவியூவில் தப்பாக சொல்லியே மீண்டும் வைரலாவார் என சில விஜய் ரசிகர்களும் விமர்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.