Connect with us
vijay varma

Bigg Boss

நீங்க இருக்கது பிக்பாஸ்… கொஞ்சம் யோசிச்சு பேசுங்க பாஸ்..! பிரதீப் பெற்றோர் மரணத்தை கொச்சைப்படுத்திய விஜய் வர்மா…

Biggboss: தமிழ் பிக்பாஸ் சீசன் தொடங்கி ஒருவாரம் நெருங்கி இருக்கும் நிலையில் ஆட்டம் சூடுபிடித்து விட்டது. அனலை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றிக்கொண்டு இருக்கிறது பிக்பாஸ் டீம். அதன் ஒரு பாதியாக இன்று வீட்டில் செமையாக ஒரு கச்சேரி நடந்தே விட்டது.

பிக்பாஸ் தமிழ் சீசன் கடந்த ஞாயிறு கோலாகலமாக தொடங்கியது. பல துறைகளில் இருந்து போட்டியாளர்கள் களமிறக்கப்பட்டு இருக்கின்றனர். யாருக்கு புகழ் கிடைக்கும் என இன்று வரை கணிப்பே இல்லை. பெரிய பிரபலம் இல்லாதவர்கள் என்பதால் போட்டியில் சுவாரஸ்யம் கூட்டப்பட்டு இருக்கிறது.

இதையும் படிங்க: ஒரு தடவ சொன்னா!. வசனத்தை ரஜினி எங்கிருந்து சுட்டார் தெரியுமா?!.. தலைவரு செம ஷார்ப்!…

பிரச்னையை இரண்டு வீட்டுக்குள் அடித்துக்கொள்ள செய்வார்கள் எனப் பார்த்தால் வேலை செய்தால் கண்டெண்டே கிடைக்கல போல. அதனால் வேலை செய்வதற்கே ஒரு தனி டீமை செட் செய்து அவர்களை தனிமைப்படுத்தி விட்டார். வீட்டில் இருக்கும் போட்டியாளர்களிடம் தான் பிரச்னையை கிளப்பி விட முடிவெடுத்து விட்டார்கள். அந்த வகையில் நேற்று சமையல் பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது.

பத்துக்கொண்டு எறியும் என பார்த்தால் பக்கென முடிந்து விட்டது. அதற்கு இன்று ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. எடை மேடையில் கொடுக்கப்படும் எடை அளவுக்கு வைக்கவில்லை என்றால் கொடுக்கப்பட்ட அழகு சாதனங்கள் பறிக்கப்படும் என்று. இந்த டாஸ்க் நடைபெற்று கொண்டு இருக்கும் போது சில ஆண் போட்டியாளர்கள் பெண்கள் மேக்கப் போடவில்லை என்றால் யார் பார்ப்பது என கமெண்ட் தட்டினார்கள்.

இதையும் படிங்க: ஷூட்டிங் ஸ்பாட்டில் கமலை வெறுப்பேத்திய கவுண்டமணி…! மன்னிப்பு கேட்க சொன்னா மானத்தையே வாங்கிட்டாரே!

இதனால் அங்கிருக்கும் பெண்கள் கோபமாகி மேக்கப் இல்லாமல் ஒருநாள் இருப்பதாக கூறி ஆதங்கப்பட்டனர். அதே நேரத்தில் நாங்களும் பெண்களுக்கு பேசுவோம் என்ற ரீதியில் இறங்கினர். இதில் விஜய் வர்மா தன்னுடைய சக போட்டியாளரான ப்ரதீப் ஆண்டனியின் குடும்ப விஷயத்தினை வைத்து அவங்க அப்பா அம்மாவை கொளுத்துன மாதிரி உன்னையும் கொளுத்திட போறான் என நக்கலடித்தார்.

குடி பிரச்னையால் ப்ரதீப் ஆண்டனியின் தந்தை அவர் அம்மாவை கொலை செய்து விட்டு அவரும் தற்கொலை பண்ணிக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு ரியாலிட்டி ஷோவில் ஒரு பிரச்னையை பேசலாம். தரம் தாழ்ந்து விமர்சிப்பது அவர்களுக்கு எப்படி வருகிறது? இதை பார்த்தால் பிள்ளைகள் கெட்டு விடமாட்டார்களா? என பலரும் எக்ஸ் தளத்தில் திட்டி வருகின்றனர். ஷோவில் வருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Continue Reading

More in Bigg Boss

To Top