Connect with us

Cinema News

பாக்கியலட்சுமி: செழியனுக்கு ஜெனியால் வந்த சிக்கல்… பாக்கியாவிற்கு எதிராக கோபியின் குரூர புத்தி..!

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் செழியன் இரவு வரவே இல்லாததால் பாக்கியாவை அவருக்கு கால் செய்ய சொல்கிறார் ஜெனி. சரியாக அந்த நேரத்தில் செழியன் வந்துவிடுகிறார். பின்னர் ஜெனியிடம் பேசிவிட்டு அவரை பாக்கியா தனியாக அழைத்து செல்கிறார்.

நீ சரியில்ல செழியா. குழந்தை பிறக்கும் முன்னர் அழுகலாம் செஞ்ச அப்போ அதெல்லாம் நடிப்பா எனக் கோபப்படுகிறார். அந்த நேரத்தில் சரியாக ஜெனியின் அம்மா வந்துவிட ஏன் திட்டுறீங்க? வேலைனு தானா போனாரு விடுங்க எனச் சொல்லிவிட்டு செல்கிறார்.

இதையும் படிங்க: எல்சியூவுக்கு நோ சொன்ன விஜய்!.. ஹாலிவுட் படத்தை அப்படியே உருவிய லோகேஷ் கனகராஜ்!.. அதே தான்..

பின்னர் வீட்டுக்கு வந்துவிட்டு உடனே கிளம்பும் பாக்கியாவை ஈஸ்வரி ரெஸ்ட் எடுத்துவிட்டு போகலாம் தானே எனக் கேட்கிறார். இல்லத்த.. ஒரு காண்ட்ராக்ட் விஷயமாக ஒரு ஆபிஸுக்கு போறேன் எனச் சொல்லி விட்டு செல்கிறார். பின்னர் எழிலும், அம்ருதாவும் பேசிக்கொண்டு இருக்கின்றனர்.

ஓவர் சந்தோஷமா இருக்கீங்க என எழிலிடம் அம்ருதா கேட்கிறார். ஆமா, அந்த பாப்பா அழகா இருக்கா. நம்ம நிலா பாப்பாக்கும் துணையா இருக்கும்ல ஒரு குழந்தை பெத்துகலாமா என எழில் கேட்கிறார். இதற்கு அம்ருதாவும் உடனே ஓகே சொல்லி விடுகிறார். 

கோபியின் நண்பர் அலுவலகத்தில் பாக்கியாவை இருப்பதை அவரும் பார்த்து விடுகிறார். ஜி.எம்மை பாக்கியா சந்திக்கும் நேரத்தில் தன் நண்பனை பார்த்து இந்த டீல் அவளுக்கு கிடைச்சா நமக்கு நல்லது இல்ல. நம்ம நட்புக்கும் நல்லது இல்ல என கெடுத்து விடுகிறார். 

இதையும் படிங்க: மன்சூர் அலிகானுக்காக சிலுக்கு செஞ்ச அந்த விஷயம்!.. மனுசன் எப்பவுமே அத மறக்கவே மாட்டாராம்!.

இதனால் பாக்கியாவுக்கு காண்ட்ராக்ட் கொடுக்கும் சமயத்தில் அவர் நண்பர் மாமனாரை தனியாக அழைத்து செல்கிறார். பாக்கியாவுக்கு இதை கொடுக்க வேண்டாம் எனக் கூற சொல்கிறார். இதனால் பாக்கியாவுக்கு அந்த டீல் கிடைக்காமல் போகிறது.

இதனால் பாக்கியா மனமுடைந்து வெளியே வரும் போது கோபி இடைமறித்து இங்க இல்ல இந்த சிட்டிக்குள்ள உன்னால ஒரு டீலையும் ஓகே செய்யவே முடியாது என சவால் விடுகிறார். அதனுடன் இன்றைய எபிசோட் முடிந்தது. 

Continue Reading

More in Cinema News

To Top