Connect with us
raveena

Biggboss Tamil 7

தொக்கா மாட்டிய பிக்பாஸ் கிளிகள்! அப்போ காதல்தானா? உண்மையை போட்டுடைத்த அம்மா கிளி

Bigg Boss Season7: விஜய் டிவியில் பரபரப்பாக ஒடிக் கொண்டிருக்கிறது பிக்பாஸ் சீசன்7 நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சிக்கு உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் ரசிகர்களாக இருந்து வருகின்றனர். சிலர் கமலுக்காக பார்க்கின்றனர். சிலர் பொழுது போக்கிற்காக பார்க்கின்றனர்.

இந்த நிலையில் ஆறு சீசன்களை கடந்து இப்போது ஏழாவது சீசன் நடந்து கொண்டிருக்கையில் ஆரம்ப முதலே பட்டாசு வெடித்த மாதிரிதான் ஆரம்பமானது. அதிலும் பிரதீப் என்ற போட்டியாளர் வீட்டிற்குள் வருபவர்களை நலம் விசாரித்தாரோ இல்லையோ வந்ததுமே தன்னுடைய விளையாட்டை ஆரம்பித்தார்.

இதையும் படிங்க: ஷூட்டிங்கில் சண்டை போட்ட லோகேஷ், விஜய்…? என்ன நடந்தது..? ஓபனாக உடைத்த லலித்குமார்..!

அது இன்று வரை தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றது. வாயை திறந்தால் சண்டை என்பது போல ஒரு பிம்பத்தை ஏற்படுத்தியிருக்கிறார் பிரதீப். ஆனால் எந்த சண்டையும் வேண்டாம். அப்படியே வீட்டிற்குள் சண்டை நடந்தாலும் நமக்கு தேவையில்லை என்கிற மாதிரி திரிந்து கொண்டிருக்கிறார் மணிசந்திரா.

டான்சரான மணி சந்திரா எப்போதுமே ஒரு கலகலப்பான பேர்வழி. அவர் உள்ள வரும் போதே  ‘ஜெயிக்கலாம்னுலாம் வரல. சும்மா அப்படியே இருந்துட்டு போலானு தான் வந்தேன்’ என்பது மாதிரி தான் கூறினார்.

இதையும் படிங்க: ‘என் நெஞ்சில் குடியிருக்கும்’ மிஸ் ஆகுமா? ரசிகர்களை சந்திக்கும் விஜய் – அதான இது இல்லாம லியோ படமா?

அதில் இவருடன் ஜெல் ஆயிருப்பவர் ரவீனா. பிக்பாஸ் வீட்டிற்குள் வரும் முன்னரே மணியும் ரவீனாவும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் சேர்ந்து நிறைய ரீல்ஸ் வீடியோக்களை போட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்தார்கள். ஒரு நேரத்தில் இவர்கள் இருவரும் காதலர்களாக இருப்பார்களோ என்ற சந்தேகம் எல்லாம் வந்தது.

அதற்கேற்றாற்போல பிக்பாஸில் ரவீனா சின்ன பிக்பாஸ் வீட்டிற்குள் போனதும் மணி நேராக ரவீனாவிடம் ‘என் கூட நீ சரியா பேச மாட்ற, டைம் ஸ்பெண்ட் பண்ண மாட்ற’ என்றெல்லாம் வழிவதை பார்க்க முடிந்தது. அதற்கு ரவீனா ‘ நானா. அப்படியெல்லாம் இல்லையே. இப்ப என்ன உன்கூட டைம் ஸ்பெண்ட் பண்ணனுமா. பண்றேன்’ என்று சொல்லி கொஞ்சும் மாதிரியான க்ளிப்ஸ் வந்தது.

இதையும் படிங்க: ஜவானுக்கே 10 தானாம்.. ஆனா லியோவுக்கு 30 ஆ? ஜெய்லர் வசூல் எல்லாம் ஜுஜுப்பி… ஆட்டம் பயங்கரமால இருக்கு…!

அதை பார்த்ததும் ரசிகர்கள் கன்ஃபார்மா இவர்கள் காதலர்கள்தான் என்ற முடிவுக்கு வந்தனர். ஆனால் இதை பற்றி ரவீனாவின் அம்மாவிடம் கேட்ட போது ‘அவர்கள் ரீல்ஸ் செய்யும் போது அந்த வீடியோவை ஷூட் செய்வதே நான் தான். எங்கே போனாலும் நாங்கள் மூன்று பேரும் சேர்ந்துதான் போவோம். அவர்களின் அந்த அழகான உறவை பற்றி தெரியாதவர்கள் எப்படி வேண்டுமானாலும் பேசுவார்கள்’ என்று கூறியிருந்தார்.

google news
Continue Reading

More in Biggboss Tamil 7

To Top