Connect with us

Cinema News

லியோல விஜய் டூப் போடாம நடிச்சி மிரட்டியிருக்காரு!.. அந்த ஹைனா யாருன்னா.. லியோ வில்லன் சொன்ன செம விஷயம்!..

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், அக்டோபர் 5-ஆம் தேதி லியோ படத்தின் ரிலீசானது.

அந்தப் படத்தில் நடிகர் விஜய் ஒரு பிரம்மாண்ட உருவத்தின் வாயை அடித்து கிழிப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கும். அந்தக் காட்சியில் நடித்த நடிகர் ஆத்மா பேட்ரிக் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் லியோ படம் குறித்து ஏகப்பட்ட தகவல்களை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க:  படிப்பு வரலன்னா சாகணுமா?!.. மகளுக்காக மல்லுக்கட்டும் வத்திக்குச்சி வனிதா!….

சஞ்சய் தத் கேங்கில் இருப்பவர் தான் நானென்றும் விஜய் என்னைத் தான் அந்தக் காட்சியில் போட்டு பொழப்பார் என்று கூறியவர், ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் விஜய் ஒரு குச்சியாக இருந்தாலும் சரி அதை எடுத்து தனது கையில் அடித்துப் பார்ப்பார், லேசாக வலித்தால் கூட ஸ்டண்ட் மாஸ்டரிடம் நேரடியாக சென்று அதை மாற்ற சொல்வார்.

நடிகர் விஷால் உள்ளிட்டவர்கள் உருட்டு கட்டையாக இருந்தாலும் சரி ரியலாக இருக்க வேண்டும் என்பதற்காக அப்படியே பயன்படுத்த சொல்வார்கள், ஆனால் அந்த விஷயத்தில் நடிகர் விஜய் ஸ்டன்ட் மேன்கள் நலனுக்காக ரொம்பவே அக்கறை செலுத்துபவர்.

இதையும் படிங்க: அய்யோ முடியலடா சாமி!.. அயலான் ரிசல்ட்.. இப்பவே கண்ணுக்குத் தெரியுதே!.. பொங்கலோ பொங்கல் தான்!..

காஷ்மீரில் கடும் குளிரில் சூட்டிங் நடந்து கொண்டிருந்தது, ஏற்கனவே அவருடன் பிகில் உள்ளிட்ட படங்களில் வேலை செய்துள்ளேன். என்னோட பாடி ஹீட் அவருக்கு தெரியும், நண்பா ஒரு ஹக் பண்ணு என்று கேட்டு, கட்டிப்பிடி வைத்தியம் செய்து கொள்வார் என ஆத்மா பேட்ரிக் அசால்ட்டாக பல விஷயங்களை கூறி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளார்.

படத்தில் ஹைனா என்றால் அர்ஜுன் தான் என்றும் அவரது கதாபாத்திரம் அந்த அளவுக்கு கொடூரமாக உருவாக்கப்பட்டுள்ளது. ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் படத்தை விட 10 மடங்கு அதிகம் ஸ்டன்ட் காட்சிகள் இந்த படத்தில் இடம் பெற்றிருக்கும் என்றும் அசத்தல் அப்டேட் கொடுத்துள்ளார்.

மேலும், நடிகர் விஜய் 90 சதவீதம் சண்டை காட்சிகளில் டூப் போடாமல் நடித்து லோகேஷ் கனகராஜையே மிரள வைத்துள்ளார். அன்பறிவு மாஸ்டர்கள் 90 நாட்களுக்கு மேல் பணியாற்றி கடும் உழைப்பை இந்த படத்துக்கு போட்டுள்ளனர் என்றார்.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top