Connect with us
rajini

Cinema News

ரஜினி படத்தோடு மோதிய விஜய் படம்! தோல்விக்கான காரணம் இதுதானா? – பணத்தை வாங்க மறுத்த எஸ்.ஏ.சி

Rajini vs Vijay: சமீபகாலமாக விஜய் ரஜினி இவர்களை பற்றிய பேச்சுத்தான் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதுவும் வாரிசு படத்திற்காக சரத்குமார் விஜயை சூப்பர் ஸ்டார் என்று சொன்னதில் இருந்து இந்த சர்ச்சை நடந்து கொண்டிருக்கின்றது.

ஏற்கனவே சூர்யவம்சம் வெற்றிவிழாவிலேயே சரத்குமார் இதை பதிவு செய்திருக்கிறார். அப்பொழுதெல்லாம் இது பெரிதாக பேசப்படவில்லை. எப்போ அரசியலுக்குள் விஜய் வருகிறார் என்று தெரிந்ததோ அதிலிருந்தே விஜயை பற்றி வரும் செய்திகளை நுணுக்கமாகக் கவனிக்க ஆரம்பித்தார்கள்.

இதையும் படிங்க:விலைபோகாத விஜய் சேதுபதி படம்!.. ஒரே ஒருத்தர் வச்ச நம்பிக்கை!.. அட அந்த சூப்பர் ஹிட் படமா?!.

இதில் ரஜினியின் ஜெயிலர் பட சாதனையை எப்படியாவது முறியடிக்க வேண்டும் என்ற திட்டத்தில்தான் லோகேஷ் இருக்கிறார் என செய்திகள் வெளியானது. இந்த நிலையில் ரஜினி படத்தோடு விஜய் படம் மோதி தோல்வியை சந்தித்திருக்கிறது.

ரஜினியின் சந்திரமுகி திரைப்படம் வெளியாகும் போது விஜயின் சச்சின் திரைப்படமும் வெளியானது. ஒரு பக்கம் பூகம்பம் கிளம்பியது என்றால் இன்னொரு பக்கம் தென்றல் வீசியது என்று சொல்லலாம்.

இதையும் படிங்க: அப்படியே ஓபன் பண்ணா!.. சும்மா சொர்க்கத்தையே காட்றியேம்மா.. ஸ்ரீதேவி பெத்த மெழுகு சிலையே!..

அந்தளவுக்கு விஜயின் சச்சின் படம் இளைஞர்களை கவரும் வகையில் அமைந்தது. ஆனால் எதிர்பார்த்த வெற்றியை பதிவு செய்யவில்லை. ஆனால் 200 நாள்கள் ஓடியதாக கலைப்புலி எஸ்.தாணு கூறினார்.

அதே சமயம் லாபகரமான படமாகவும் அமைந்தது என்றும் கலைப்புலி தாணு கூறினார். வந்த லாபத்தில் குறிப்பிட்ட தொகையை எடுத்து எஸ்.ஏ.சியிடம் கொண்டு போய்க் கொடுத்தாராம். ஆனால் உங்களுக்கு லாபம் வந்தால் சரி என அந்தப் பணத்தை வாங்க மறுத்து விட்டாராம்.

இதையும் படிங்க: வாலியின் பாடல் பிடிக்காமல் கண்ணதாசனிடம் போன எம்.ஜி.ஆர்!… அட அந்த பாட்டா?!..

author avatar
Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Continue Reading

More in Cinema News

To Top