
Cinema News
இத்தனை ஹிட் படங்களில் வாய்ப்பு வந்தும் மிஸ் பண்ணியிருக்காரா ஜெய்!.. லிஸ்ட்டு பெருசா போகுதே!..
Published on
By
Actor Jai: விஜய் நடித்த பகவதி திரைப்படத்தில் அவரின் தம்பியாக நடித்து சினிமாவில் நுழைந்தவர் நடிகர் ஜெய். வெங்கட்பிரபு இயக்கிய சென்னை 28 திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். அதன்பின் கோவா, சுப்பிரமணியபுரம், கலகலப்பு 2, எங்கேயும் எப்போதும், ராஜா ராணி, வடகறி உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்தார்.
பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் சுப்பிரமணியபுரம், ராஜாராணி, எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட சில படங்கள் அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என அடம்பிடிக்காமல் மற்ற இளம் ஹீரோக்களோடு இணைந்தும் நடிக்க இவர் தயாராக இருப்பதால் இவருக்கு வாய்ப்புகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
இதையும் படிங்க: ஜோவிகா படிப்பை விட்டதற்கு காரணமே அவங்க அம்மா வனிதா தானா?.. பகீர் கிளப்பிய பள்ளி ஆசிரியை!..
நடிகை அஞ்சலியுடன் இவருக்கு காதல் இருப்பதாக செய்திகளும் வெளியானது. ஆனால், அதன்பின் அது பிரேக்கப் ஆகிவிட்டதாக சொல்லப்பட்டது. இதுவரை ஜெய் திருமணம் செய்துகொள்ளவில்லை. இவர் இசையமைப்பாளர் தேவாவின் உறவினரும் கூட. ஒரு படத்திற்கும் இசையும் அமைத்திருக்கிறார்.
இப்போதும் இவரின் கைவசம் சில திரைப்படங்கள் இருக்கிறது. இவர் நடித்த சுப்பிரமணியபுரம் படத்தின் வாய்ப்பு முதலில் சாந்தனுவுக்கு போனது பலருக்கும் தெரியும். ஆனால், பல சூப்பர் ஹிட் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தும் அவர் நடிக்கமுடியாமல் போன கதையைத்தான் இங்கே பார்க்க போகிறோம்.
இதையும் படிங்க: ஷூட்டிங்கில் ஹாயாக இருந்த ரஜினி… ஒரே அழைப்பால் அலற விட்ட பிரபலம்..! சூப்பர்ஸ்டாருக்கே இந்த நிலைமையா?
சமுத்திரக்கனி இயக்கிய நாடோடிகள் படத்தில் ஜெய் நடிப்பதாக இருந்தது. அதேபோல், ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா, சந்தானம் நடித்து பெரிய ஹிட் அடித்த சிவா மனசுல சக்தி படத்தில் ஜெய் நடிப்பதாக இருந்தது. ஜீவாவுக்காக சில மாதங்கள் ராஜேஷும் காத்திருந்தார். ஆனால், சுப்பிரமணிபுரத்திற்காக தாடி வளர்த்திருந்ததால் அந்த படத்தில் நடிக்கமுடியவில்லை.
அதேபோல், ராம்குமாரின் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலாபால் உள்ளிட்ட பலரும் நடித்து உருவாகி ரசிகர்களிடம் வெற்றி பெற்று இப்போதுவரை பேசப்படும் ராட்சசன் மற்றும் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த ‘விண்ணை தாண்டி வருவாயா’ படத்திலும் ஜெய் நடிப்பதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் இந்த படங்களிலெல்லாம் அவர் நடிக்கவில்லை.
இதையும் படிங்க: பிக்பாஸில் இந்த வாரம் எலிமினேஷன் இவர் தானாம்… செல்லாது செல்லாது… கதறும் ரசிகர்கள்..!
Bison: மாரிசெல்வராஜ் இயக்கத்தில் அடுத்து வரப் போகும் திரைப்படம் பைசன். துருவ் விக்ரம் நடிப்பில் இந்தப் படம் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கின்றன....
Bison: நடிகர் விக்ரமின் மகனும் நடிகருமான துருவ் விக்ரம் நடிப்பில் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் பைசன். இந்த படம் அக்டோபர்...
Simbu-Dhanush: தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜித் வரிசையில் அடுத்த இரட்டை போட்டியாளர்களாக பார்க்கப்பட்டவர்கள் சிம்புவும் தனுஷும். சிம்பு குழந்தை...
SMS: கடந்த 2009 ஆம் ஆண்டு ராஜேஷ் இயக்கத்தில் வெளியான திரைப்படம்தான் சிவா மனசுல சக்தி. இந்தப் படத்தில் ஜீவா நாயகனாக...
கோமாளி படம் மூலம் இயக்குனராக களமிறங்கி முதல் படத்திலேயே ஹிட் கொடுத்தவர் பிரதீப் ரங்கநாதன். அந்த படத்தின் இறுதியில் ஒரு காட்சியில்...