அந்த வசனத்தை இதுக்காகத்தான் பேச சொன்னேன்.. லியோ பட சர்ச்சை பற்றி விளக்கம் சொன்ன லோகேஷ்..

Published on: October 8, 2023
leo
---Advertisement---

Lokesh kangaraj: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் லியோ. இந்த படம் வருகிற 19ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தை விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த படத்தில் மிஷ்கின், திரிஷா, மன்சூர் அலிகான், அர்ஜூன், சஞ்சய் தத், கவுதம் மேனன் என பலரும் நடித்துள்ளனர்.

சமீபத்தில் வெளியான லியோ பட டிரெய்லரில் ஒரு காட்சியில் விஜய் பேசியிருந்த வசனம் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் கிளம்பியது. பல பெண்கள் அமைப்பும் இதை கண்டித்திருந்தது. குறிப்பாக விஜய்க்கு பெண் ரசிகைகளும், குழந்தை ரசிகைகளும் அதிகம்.

இதையும் படிங்க: ஜெயிலர் வசூலை முந்த பிரஷர் கொடுத்த லியோ தயாரிப்பாளர்!.. ஒரே வார்த்தையில் வாயை மூட வைத்த லோகேஷ் கனகராஜ்!..

‘அவரின் திரைப்படங்களை குழந்தைகளோடு குடும்பமாக சென்று ரசிகர்கள் பார்க்கிறார்கள். அதோடு, அரசியல் நடவடிக்கைகளும் அவர் ஈடுபட்டு வருகிறார். இப்படி இருக்கும் போது இது போன்ற வசனத்தை அவர் பேசலமா?’ என பலரும் சமூகவலைத்தளங்களில் கண்டனங்களை பதிவிட்டனர்.

இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகாரும் கொடுக்கப்பட்டது. எனவே, இந்த விவகாரம் பரபர்ப்பை எற்படுத்தியது. இந்நிலையில், லியோ படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது லியோ படம் பற்றிய பல தகவல்களையும் அவர் பகிர்ந்து கொண்டார்.

இதையும் படிங்க: சூப்பர் ஹிட் படத்தை இயக்க வந்த வாய்ப்பு!.. இரண்டு முறையும் மறுத்த மனோபாலா.. அட அந்த படமா?!..

அவரிடம் சர்ச்சை வசனம் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் சொன்ன லோகேஷ் ‘அந்த வசனத்தை பேச சொன்னது நான்தான். இதற்கு விஜய் அண்ணாவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இதை நான் சொன்ன போது ‘இந்த வசனத்தை நான் பேசலாமா?’ என விஜய் தயங்கினார்.

ஆனால், கோபத்தில் வரும் வார்த்தை என்று சொல்லி அவரை சம்மதிக்க வைத்து இந்த வசனத்தை பேச வைத்தேன். எனவே, இதற்கு நானே முழு பொறுப்பு. இந்த வசனம் யாரையேனும் புண்படுத்தியிருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ என லோகேஷ் கனகராஜ் தெரிவித்தார்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.