Connect with us

Bigg Boss

ஜோவிகாவின் அப்பா இவர் தான்… அவருடன் இன்னும் தொடர்பில் தான் இருக்கேன்… வனிதா சொன்ன நியூஸ்..!

BiggBoss Tamil: தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியால் அங்கிருக்கும் போட்டியாளர்கள் குறித்த ஆச்சரிய தகவலும், அதிர்ச்சி தகவலும் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி கொண்டே இருக்கிறது. கடந்த வாரத்தின் கண்டெண்ட் குயினான ஜோவிகா குறித்த சில தகவலும் றெக்கை கட்டி வந்துவிட்டது.

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தொடங்கி சுவாரஸ்யமாக நடந்து வருகிறது. ஒரு வாரத்தினை கடந்த நிலையில் நேற்றைய வீக் எண்ட் எபிசோட்டில் அனன்யா ராவ் வெளியேறினார். போன வாரத்தில் முக்கிய விஷயமாக பேசப்பட்டது வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகாவின் கல்வி தான்.

இதையும் படிங்க: காஷ்மீர்ல அந்த ஹைனா சீன் எப்படி எடுத்தோம் தெரியுமா?.. லோகேஷ் கனகராஜ் இவ்ளோ ரிஸ்க் எடுத்தாரா?..

கல்வி அடிப்படை அதை நீ தெரிந்து வைத்திருக்க வேண்டும் என விசித்ரா பேச பிரச்னை பூதாகரமானது. நான் என்னை போல ப்ரஷரால் தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களின் பிரதிநிதியாக தான் இங்கு வந்திருக்கிறேன். எனக்கு பிடிக்கல கஷ்டப்பட்டு செய்ய முடியாது என ஜோவிகா வாதாடினார்.

அவரின் தாயான வனிதாவும் அவருக்கு ஆதரவாக தொடர்ந்து பேசி வருகிறார். மேலும் ஜோவிகா எழுதி வாசித்த தமிழ் வீடியோ ஒன்றினையும் தன்னுடைய இன்ஸ்டாவில் பகிர்ந்து இருந்தார். அதில் இந்த ஆடியோவை அவர் அப்பா அனுப்பி உடனே பதிவிடுமாறு கூறி இருந்ததாக குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: அஜித் என்னை ஃபீல் பண்ணி கட்டிப்பிடிக்க சொன்னார்… காதல் மன்னன் திலோத்தமா ஷாக்!

அப்போ லைவில் வந்த வனிதாவிடம் ஆகாஷுடன் இன்னமும் பேசுகிறீர்களா எனக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த வனிதா, எங்களுக்குள் பிரச்னை இருந்தது. அப்போ வயசு பிரச்னையால் அதனை செய்து விட்டோம். இப்போ பக்குவம் வந்து விட்டது. நாங்க பெற்றோர்கள். அதனால் பேசிக்கொண்டு இருக்கோம்.

ஜோவிகாவின் தந்தை ஆகாஷ், ஜெய்னிதாவின் தந்தை ராஜனுடனும் நான் இன்னமும் பேசிக்கொண்டு தான் இருக்கேன் என லைவில் குறிப்பிட்டு இருந்தார். இதனால் பிக்பாஸில் ஆகாஷ் வருவாரா? இல்லை ஃபேமிலி சுற்றில் வனிதா மட்டும் வருவாரா என எதிர்பார்ப்பு உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

More in Bigg Boss

To Top