‘விக்ரம்’ படத்துல மிஸ் ஆனத இந்த படத்துல புடிச்சுட்டேன்! லியோ படம் பற்றிய சீக்ரெட்டை பகிர்ந்த லோகேஷ்

Published on: October 9, 2023
leo
---Advertisement---

Vikram vs Leo:  இப்போது சமூக வலைதளங்களில் பேசு பொருளாக இருப்பது இயக்குனர் லோகேஷை பற்றித்தான். விஜய் நடிப்பில் வெளிவரக் காத்துக் கொண்டிருக்கும் லியோ படத்தின் டிரெய்லர் வெளியாகி பெரிய ஹைப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

லியோ பட ப்ரோமோஷனை பிரம்மாண்டமாக படத்தின் இயக்குனரான லோகேஷே செய்து வருகிறார். போதும் போதும் என்று சொல்லுமளவிற்கு படத்திற்கான அப்டேட்களை கொடுத்துக் கொண்டு வருகிறார்.

இதையும் படிங்க: ஜோவிகாவின் அப்பா இவர் தான்… அவருடன் இன்னும் தொடர்பில் தான் இருக்கேன்… வனிதா சொன்ன நியூஸ்..!

புதுப்புது தகவல்கள், சூடான செய்திகள் போல யாரும் இதுவரை கேள்விப்படாத சில சுவாரஸ்யமான தகவல்களை பேட்டிகளின் போது பகிர்ந்து வருகிறார். ஆண்டனி தாஸ், ஹரால்டுதாஸ், லியோ தாஸ் என மூன்று முக்கிய கதாபாத்திரங்களை மையப்படுத்திதான் லியோ படம் அமைந்திருக்கிறது.

இதில் ஹரால்டு தாஸாக நடிகர் அர்ஜூன் நடித்திருக்கிறார். கிட்டத்தட்ட 170 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் அர்ஜூன் அவருடைய கெரியரில் ஏராளமான சண்டைக்காட்சிகளை பார்த்திருப்பார். ஆனால் லியோ படத்தில் அர்ஜூனே ‘என்னடா பண்ற? இந்த மாதிரி நான் இதுவரை பண்ணதே இல்லை’ என்று லோகேஷை பார்த்து சொல்லுமளவிற்கு காட்சிகளை எடுத்து வைத்திருக்கிறாராம் லோகேஷ்.

இதையும் படிங்க: கண்ட்ரோல் இருக்கவங்க மட்டும் பாருங்க!.. தளதள உடம்ப காட்டி தவிக்கவிடும் தர்ஷா குப்தா..

அதுமட்டுமில்லாமல் கௌதம் மேனனுக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடிக்கிறாராம். அந்த கேரக்டருக்கு போலித்தன்மை இல்லாமல் நிஜத்திலும் அப்படிப்பட்ட கேரக்டர் முகத்தில் இருக்க வேண்டும் என்பதற்காகவே ப்ரியா ஆனந்தை தேர்வு செய்தாராம்.

ஆனால் ப்ரியா ஆனந்த் விக்ரம் படத்தில் கமலுக்கு மருமகளாக நடிக்க வேண்டியதாம்.ஆனால் ஏதோ ஒரு காரணத்தினால் அப்போது நடிக்க முடியவில்லையாம். அதனால் இந்த படத்தில் ப்ரியா ஆனந்தை பயன்படுத்திக் கொண்டேன் என்று லோகேஷ் கூறினார்.

இதையும் படிங்க: அஜித் என்னை ஃபீல் பண்ணி கட்டிப்பிடிக்க சொன்னார்… காதல் மன்னன் திலோத்தமா ஷாக்!