mgr movies: எம்.ஜி.ஆர் எப்போதும் திறமைசாலிகளை மதித்து அவர்களுக்கு உரிய மரியாதை கொடுப்பார். அதேபோல், நல்ல திறமையாளர்களை கண்டால் பாராட்டுவதோடு, அவர்களை பயன்படுத்தியும் கொள்வார். கண்ணதாசனுடன் அவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டபோது கவிஞர் வாலியிடம் இருக்கும் திறமையை கண்டறிந்து தனது படங்களில் தொடர்ந்து எழுத வைத்தார்.
சினிமாவில் ஹீரோ ஆவதற்கு முன்பே கண்ணதாசனுடன் எம்.ஜி.ஆருக்கு பழக்கம் உண்டு. எனவே, அவர் ஹீரோவாக மாறிய பின் அவர் நடிக்கும் படங்களில் கண்ணதாசனுக்கு கதை, வசனம் எழுதும் வாய்ப்பை வாங்கி கொடுத்தார். அதேபோல், எம்.ஜி.ஆர் முதல்வரான பின் கண்ணதாசனை தமிழக அரசவை கவிஞராக நியமித்து அழகு பார்த்தார்.
இதையும் படிங்க: வாலியின் பாடல் பிடிக்காமல் கண்ணதாசனிடம் போன எம்.ஜி.ஆர்!… அட அந்த பாட்டா?!..
பல நடிகர்களின் திறமையும் கண்டறித்து அவர்களை தனது படங்களில் தொடர்ந்து நடிக்க வைத்தார். நம்பியார், நாகேஷ், அசோகன், எம்.ஆர்.ராதா, வி.கே.ராமசாமி, ரங்கராவ் என பல நடிகர்களையும் தனது படங்களில் நடிக்க வைத்தார். அதேபோல், அவர் அரசியல்வாதியாகி முதல்வரான பின்னர் தனக்கு தெரிந்த பலரையும் சட்டமன்ற உறுப்பினராக்கி அழகு பார்த்தார். அதில் பலருக்கும் அமைச்சர் பதவியும் கொடுத்தார்.
எம்.ஜி.ஆரிடம் டி.என்.பாலு என்கிற ஒரு கார் ஓட்டுனர் இருந்தார். சில மாதங்களிலேயே அவரை எம்.ஜி.ஆருக்கு பிடித்துப்போனது. ஏனெனில் கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பார் பாலு. எனவே, அவருக்கு நல்ல சம்பளமும் எம்.ஜி.ஆர் கொடுத்தார். எம்.ஜி.ஆரிடம் ஒன்றை சொல்ல வேண்டும் என பாலு பல நாட்கள் காத்திருந்தார்.
இதையும் படிங்க: 18 நாட்களில் முடிக்கப்பட்ட படம்… எம்.ஜி.ஆர் ராசியால் 100 நாட்கள் ஓடிய அதிசயம்.. என்ன படம் தெரியுமா?
சரியான சூழ்நிலை அமையாமல் போனது. ஒருநாள் அவரிடம் பேச வாய்ப்பு கிடைத்தது. அப்போது ‘சார் நான் நன்றாக கதை, வசனம் எழுதுவேன். நீங்கள் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும்’ என சொல்லி தான் எழுதிய கதை, வசனங்களை அவரிடம் காட்டினார். அதைப்பார்த்த எம்.ஜி.ஆர் ‘இவ்வளவு திறமை வாய்ந்த உங்களை கார் டிரைவராக வேலை பார்க்க வைத்து விட்டேனே’ என வருந்தினார்.
மேலும், அடுத்த நாளே அவரை அழைத்து தெய்வத்தாய் படத்திற்கு ஏ.எம்.வீரப்பனுடன் சேர்ந்து திரைக்கதை அமைக்கும் வேலையை கொடுத்தார். பாலுவும் சிறப்பாக தனது வேலையை செய்தார். அந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது. அதன்பின் எம்.ஜி.ஆர் நடித்த பல படங்களில் கதை வசனம் எழுதினார் பாலு. அதன் மூலம் பொருள் ஈட்டி வாழ்வில் நல்ல நிலைக்கும் வந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: உன்னால புரொடியூசர் நஷ்டம் ஆகணுமா?… வெண்ணிறாடை நிர்மலாவிற்கு கண்டிஷன் போட்ட எம்.ஜி.ஆர்…
