Connect with us

Cinema News

வெறுத்துப்போச்சு! சரக்கடிக்கிறதை நிறுத்திட்டேன் :  நடிகை சோனாவுக்கு என்னாச்சு?

சில காரணங்களால் சினிமாவில் அதிகம் தலைகாட்ட முடியவில்லை என்றும், விரைவில் தான் நடித்த படங்கள் வெளியாகும் எனவும் நடிகை சோனா தெரிவித்துள்ளார்.

2be9f6aa6f074c760dcb79508ff25e73

சில வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சோனா. குசேலன் படத்தில் வடிவேலுக்கு மனைவியாக நடித்து அசத்தியிருப்பார். அதன்பின் 2018ம் ஆண்டு வெளியான ஜானி படத்தில் நடித்திருந்தார். கடந்த சில வருடங்களாக அவரை அதிகம் சினிமாவில் பார்க்க முடிவதில்லை. இது தொடர்பாக அவரின் முகநூல் பக்கத்தில் ரசிகர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இந்நிலையில், தனது முகநூலில் சோனா ஒரு புதிவை இட்டுள்ளார். அதில் ‘ நான் ஏன் நடிக்கவில்லை என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். முதலில் அதைப்பற்றி கவலைப்படுவது உங்கள் வேலையில்லை.  ஆனாலும், என் மீது அக்கறை உள்ளவர்களுக்கு நான் பதில் சொல்கிறேன். நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. இந்த வரும் 4 படங்களில் நடித்துள்ளேன். 12 படங்களை தவிர்த்தேன்.  ஒரே மாதிரி கதாபாத்திரங்கள் வருவதால் வெறுத்துப்போய்விட்டேன்.

எனவே, நல்ல கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன்.  முன்பு போல் நான் ஒன்றும் தெரியாதவள் அல்ல.. குடிப்பதை நிறுத்திவிட்டேன். பணத்துக்காக ஓட எனக்கு விருப்பம் இல்லை. 2020 எனக்கு சிறப்பாக இருக்கும் என நம்புகிறேன். தற்போது சேஷிங், பரமபதம் விளையாட்டு, அசால்ட், தேடுதல், பச்ச மாங்கா ஆகிய படங்கள் நான் நடித்து வெளியே வரவுள்ளது. இது ஒன்றும் சோக பதிவல்ல. எல்லோருக்கும் புது வருட மற்றும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்’ என அதில் குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading

More in Cinema News

To Top