விஜய், ரஜினிலாம் ஹீரோக்கள் இல்லை… ஜீரோக்கள்… பொது மேடையில இப்டியா பேசுவீங்க.. கொதித்த பிரபல தயாரிப்பாளர்..!

Published on: October 10, 2023
---Advertisement---

Press Meet: பொதுவாக சினிமா பிரபலங்கள் பேசுகிறேன் என்ற பெயரில் பெயர் வாங்குவதும், விமர்சிக்கப்படுவதும் சினிமா மேடைகளில் தான் இப்படி பேசி பல்ப் வாங்கியவர்களே அதிகம். அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது கோலிவுட் வட்டாரத்தினையே அதிர்ச்சியாக்கி இருக்கிறது.

சியோன் ராஜா எழுதி இயக்கி இருக்கும் படம் சமூக விரோதி. ஜியோனா பிலிம் பேக்டரி சார்பில் தயாரித்திருக்கும் இப்படத்தில் பிரஜின் நடித்து இருக்கிறார். இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பர்ஸ்ட் லுக் சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இவ்விழாவில் பல்வேறு அரசியல் இயக்கங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: விஜய் ரசிகர்களை விட மோசமால இருக்காங்க கமல் ஃபேன்ஸ்… பிரபலத்தையே அசிங்கப்படுத்திய நிகழ்வு..!

அப்போது பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியைச் சேர்ந்த குணாஜி பேசும் போது, யார் சமூக விரோதி தெரியுமா? ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் என அனைவருமே சமூக விரோதிகள் தான். மக்கள் பிரச்சினைக்காகக் குரல் கொடுக்காத இவர்கள் தான் சமூக விரோதிகள் என்றார்.

அப்போது அவர் சொன்ன கருத்துக்கு முரணாக பேசிய நடிகர் சௌந்தர்ராஜன், குணாஜி சொன்னதில் எனக்கு உடன்பாடு இல்லை. மக்கள் அவர்களுக்கு ஓட்டு போடவில்லை. அப்போ ஏன் அவர்களையே எல்லா பிரச்னைக்கும் இழுக்கிறீர்கள். நடிகர்களைக் குற்றம் சாட்டுவதை முதலில் நிறுத்துங்கள்  எனப் பேசினார்.

ஜல்லிக்கட்டு பிரச்னைக்காக டெல்லி போன போது என்னையே சிலர் சமூக விரோதி எனக் கூறினார்கள் என்றார். அப்போது நிகழ்ச்சியில் சலசலப்பு நிலவியது. அப்போ எழுந்த பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் இப்டி ஒரு சினிமா மேடையை நான் பார்த்ததே இல்லை. 

இதையும் படிங்க: கமலுக்கு மன்சூர் அலிகான்… விஜயிக்கு சத்யராஜா? லோகேஷின் ஸ்கெட்சே செம ஸ்பெஷல் தான்..!

ஒருத்தர் பேச இன்னொருத்தர் பதில் சொல்ல என மாத்தி மாத்தி நடந்துக்கிட்டே இருக்கு. படத்தினை பத்தி பாராட்டி பேசிய அவர். இந்த படத்தின் டைரக்டர் அற்புதமா இந்த படத்தினை எடுத்து இருக்கார். அவர் லோகேஷ் கனகராஜ் மாதிரி வர வாய்ப்பு இருக்கு என பாராட்டி பேசிவிட்டு அமர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.