லோகேஷ் சொன்னா விஜயிக்கு புத்தி இல்லையா..? இதை சொல்ற அளவு அவர் பெரிய ஆளா..?

Published on: October 11, 2023
---Advertisement---

Lokesh Leo: விஜயின் லியோ படத்தின் ட்ரைலர் ரிலீஸாகி பல புயலை கிளப்பி விட்டு இருக்கிறது. பலர் ஆதரவாகவும் சிலர் எதிராகவும் தொடர்ச்சியாக கருத்துக்களை பதிவு செய்து வந்தனர். விஜயிக்கு ஆதரவாக லோகேஷ் பேசியதும் தற்போது சர்ச்சையாகி விட்டது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாக இருக்கும் படம் லியோ. இப்படத்தின் ரிலீஸ் நெருங்க நெருங்க சர்ச்சைகள் தொடர்ச்சியாக படையெடுத்து வருகிறது. நடன கலைஞர்களுக்கு சம்பளம் வரவில்லை என அவர்கள் போராட்டம் நடத்த இருப்பதாக தகவல்கள் கசிந்தது.

இதையும் படிங்க: ஜெயலலிதா கேட்டும் மறுத்த நளினி!.. அதற்கு அவர் சொன்ன காரணம்தான் ஹைலைட்!..

அதே நேரத்தில் லியோ படத்தின் ஆடியோ ரிலீஸே இல்லை. ஓவரா டிக்கெட் கேட்குறாங்க. பாதுகாப்பு காரணங்களுக்காக ரத்து செய்வதாக அறிவிப்பு வெளியானது. இதனால் விஜய் ரசிகர்கள் செம அப்செட்டாகினர். அதே நேரத்தில் ட்ரைலரை ரிலீஸ் செய்து கூல் செய்து விடலாம் என்ற ஐடியாவில் படக்குழு ட்ரைலரை பல எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியிட்டது.

ஆனால் ரிலீஸ் அன்றே ரோகிணி தியேட்டரை தரைமட்டமாக்கி சம்பவத்தினை தொடங்கி வைத்தனர் விஜய் ரசிகர்கள். தொடர்ந்து அந்த ட்ரைலரில் ஒரு கெட்ட வார்த்தையை விஜயே பேச அங்கு வெடித்தது பிரச்சனை. சின்ன குழந்தைகளுக்கு ரொம்பவே பிடித்த விஜய் இதை செய்தால் குழந்தைகளும் அதையே சொல்லும் தானே என பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் லியோ படத்தின் ப்ரோமோஷனுக்காக விஜயை அந்த வார்த்தை பேச சொன்னது நான் தான். விஜயிடம் கோபத்தில் வரும் வார்த்தை தான். அதை பேச சொல்லி நான் தான் சமாதானப்படுத்தினேன். அவருக்கு இதில் விருப்பமும் இல்லை.

இதையும் படிங்க: சந்திரமுகியாக நான் தான் நடிக்க வேண்டியது… நல்ல வேலை நடக்கல…! நடந்தா நொந்து இருப்போம்ல..!

இந்த பிரச்னைக்கு நானே முழுமையாக பொறுப்பேற்கிறேன் எனத் தெரிவித்து இருந்தார். இதுகுறித்து பேசிய, திரை விமர்சகர் அந்தணன் லோகேஷே சொன்னாலும் விஜய் எப்படி பேசி இருக்கலாம். லோகேஷ் ஒன்னும் அவ்வளவோ பெரிய டைரக்டர் இல்லை. அவர் சொல்லியதை அப்படியே செய்யணுமா?

விஜயிக்கு சொந்த புத்தி இருக்கும் தானே. அவர் வேண்டாம் என சொன்னால் லோகேஷ் விட்டு இருப்பாரே. லியோ ட்ரைலர் நல்லா இருக்கு அதை பார்த்த பின்னர் படம் பார்க்க இன்னும் ஆசை அதிகமாகி இருக்கிறது. உண்மை தான். ஆனால் இந்த சர்ச்சையை விஜயை தவிர்த்து இருக்கலாம். அது அவர் ரசிகர்களுக்கு தவறான உதாரணமாகி விடும் என்றும் குறிப்பிட்டார்.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.