பேசாதீங்க அண்ணாச்சி… அப்புறம் ஃபீல் பண்ணுவீங்க… லியோ டிரெய்லரை பங்கமாய் கலாய்த்த இமான் அண்ணாச்சி…

Published on: October 11, 2023
iman annachi about leo movie trailer
---Advertisement---

Leo movie: நடிகர் விஜய் நடிப்பில் இந்த மாதம் வெளியாகவுள்ள திரைப்படம்தான் லியோ. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்துள்ளார். இப்படத்தினை மாநகரம், விக்ரம் போன்ற பல வெற்றி திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் வருகின்ற 19ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

இப்படத்தில் விஜய்க்கு வில்லனா சஞ்சய்தத் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் அர்ஜுன், கெளதம் வாசுதேவமேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த் போன்ற பல முக்கிய நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் திரைக்கு வருவதற்கு முன்பே இப்படம் பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறது.

இதையும் வாசிங்க:லியோ கிளைமேக்ஸ்ல ராஜமெளலி ஹீரோவா?.. லோகேஷ் கனகராஜ் இறங்கி செய்ய ஆரம்பிச்சிட்டாரா?..

இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. அதிரடியாய் இருந்த இந்த டிரெய்லரில் விஜய் கெட்ட வார்த்தை பேசியிருந்தார். அவர் பேசிய வார்த்தை பெண்களை இழிவுபடுத்துவதாக உள்ளது என பல பெண்கள் சார்ந்த அமைப்பினர் போலிசில் புகார் அளித்தவண்ணம் உள்ளனர். அதைபோல் இந்த படத்தின் போஸ்டரில் விஜய் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகளும் உள்ளன.

இந்த விஷயங்களுக்கும் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. ஆனால் இப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இது குறித்து பேசுகையில்,” நான்தான் விஜய்யை அவ்வாறு பேச வைத்தேன் எனவும், கதைக்கு அந்த வார்த்தை மிகவும் தேவைபட்டது எனவும், அதனால் அதற்கு நானே பொறுப்பு” எனவும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் இதுவும் மக்களிடையே எதிர்ப்பை சந்த்தித்துள்ளது.

இதையும் வாசிங்க:அஜித்திடம் அந்த மாதிரி விஷயம்லாம் அனுமதியே இல்லையாம்! இப்படியும் ஒரு நடிகரா? சர்டிஃபிக்கேட் கொடுத்த தங்கத்தலைவி

இயக்குனர் என்ன சொன்னாலும் விஜய் செய்வாரா என ஒரு அமைப்பினர் எதிர்ப்பினை தெரிவிக்கின்றனர். அதே சமயம் இன்னொருபுறம் இதெல்லாம் ஒரு வார்த்தையா என இக்கால இளைஞர்கள் விஜய்க்கு தங்களது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர். இது குறித்து நடிகர் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரான இமான் அண்ணாச்சி சமீபத்தி பேசியுள்ளார். சமூகவிரோதி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற இமான் இப்பட இயக்குனரிடம் இப்படத்தில் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகள் உள்ளதா என கேட்டார். அதற்கு இயக்குனரும் ஆமாம் என கூறியுள்ளார்.

பின் இப்படத்தில் கெட்ட வார்த்தை பேசியுள்ளனரா என கேட்டதற்கு இயக்குனரும் ஆமாம் என கூறினார். அதற்கு இமான் அண்ணாச்சி சிகெரெட் பிடிப்பது கெட்ட வார்த்தை பேசுவது போன்ற காட்சிகள் இருக்கிறது என்றால் இப்படம் கண்டிப்பாக வெற்றி அடையும் என கூறி இவர் மறைமுகமாக லியோ படத்தின் டிரெய்லரை கலாய்த்தார். ரொம்ப தப்பு அண்ணாச்சி இது…

இதையும் வாசிங்க:லோகேஷ் சொன்னா விஜயிக்கு புத்தி இல்லையா..? இதை சொல்ற அளவு அவர் பெரிய ஆளா..?

amutha raja

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.