Connect with us
mgr

Cinema History

கலைஞர் வசனத்தால் தோல்வி அடைந்த எம்.ஜி.ஆர் படம்… ரூட்டை மாற்றியிய பொன்மன செம்மல்!..

Actor mgr: எம்.ஜி.ஆர் சினிமாவில் ஹீரோவாக நடிக்க துவங்கிய காலத்தில் கதாசிரியர், வசனகர்த்தாவாக வளர்ந்தவர் கலைஞர் கருணாநிதி. 1940களில் பிரபலமாக இருந்த ஜுபிடர் பிக்சர்ஸ் நிறுவனம் நாடகம் ஒன்றை சினிமாவாக எடுக்க திட்டமிட்டது. அப்போது சின்ன சின்ன வேடங்களில் நடித்து கொண்டிருந்த எம்.ஜி.ஆரை ஹீரோவாக நடிக்க வைக்கலாம் என முடிவு செய்யப்பட்டது.

மேலும், குடியரசு எனும் பத்திரிக்கையில் வேலை செய்து கொண்டிருந்த கருணாநிதியை வசனம் எழுத வைக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. இந்த படத்தில் நடிக்க எம்.ஜி.ஆரும், வசனம் எழுத கருணாநிதியும் கோவைக்கு சென்றபோதுதான் இருவருக்கும் முதன் முதலாக அறிமுகம் ஏற்பட்டது. அப்படி உருவான திரைப்படம்தான் 1947ம் வருடம் வெளிவந்த ராஜகுமாரி. அதன்பின் எம்.ஜி.ஆரும், கருணாநிதியும் நண்பர்களாக மாறினார்.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் தலையில் செருப்பை வைக்க சொன்ன நபர்!.. எம்.ஜி.ஆர் சொன்ன பதில் என்ன தெரியுமா?..

இப்படத்திற்கு பின் எம்.ஜி.ஆர் நடித்த அபிமன்யூ, மந்திர குமாரி, மருதநாட்டு இளவரசி ஆகிய படங்களுக்கு கருணாநிதி வசனம் எழுதினார். இந்த படங்களின் வெற்றியால்தான் கலைஞருக்கு பராசக்தி படத்தில் வசனம் எழுத வாய்ப்பும் கிடைத்தது. சினிமா மூலம் ஏற்பட்ட நட்பு எம்.ஜி.ஆர் கருணாநிதிக்கும் இடையே அரசியலிலும் நீடித்தது. அதன்பின் நடந்த கதை எல்லோருக்கும் தெரியும்.

இந்நிலையில், கலைஞர் வசனத்தால் தோல்வி அடைந்த ஒரு எம்.ஜி.ஆர் படம் பற்றித்தான் நாம் இங்கே பார்க்கபோகிறோம். பராசக்தி படத்திற்கு பின் 1953ம் வருடம் எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவந்த படம் ‘நாம்’. இந்த படத்தில் வி.எஸ்.ஜானகி எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இதையும் படிங்க: 5 ரூபாய் கடனை அடைக்க எம்.ஜி.ஆர் பட்ட பாடு!.. திருப்பி கொடுத்த தொகை எவ்வளவு தெரியுமா?!

கலைஞர் கருணாநிதி இந்த படத்திற்கு திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்களை எழுதினார். இந்த படத்தில் எம்.ஜி.ஆர் மிகவும் அற்புதமாக நடித்திருந்தார். ஆனால், கலைஞரின் வசனம் படத்தின் குடும்ப செண்டிமெண்ட் கதைக்கு செட் ஆகவில்லை. கலைஞரின் வசனங்களை எம்.ஜி.ஆர் சிறப்பாக பேசி நடித்திருந்தும் அந்த படம் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. எனவே, ‘நாம்’ ஒரு தோல்விப்படமாக அமைந்தது.

இதை எம்.ஜி.ஆரும் புரிந்து கொண்டு உஷார் ஆனார். அதன்பின் கலைஞரின் வசனத்தை எந்த மாதிரியான கதைக்கு பயன்படுத்த வேண்டும். வசனங்களின் அளவு எந்த அளவுக்கு இருக்க வேண்டும் என்பதில் தெளிவான ஒரு முடிவை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கார் டிரைவரை கதாசிரியர் ஆக்கிய எம்.ஜி.ஆர்!.. பல ஹிட் படங்களில் கலக்கிய சம்பவம்!..

google news
Continue Reading

More in Cinema History

To Top