Cinema News
என்னது அந்த மாதிரி படமா? யாரும் வாய்ப்பு கொடுக்கல! வேறு வழியும் தெரியல – இந்த நடிகருக்கு இப்படி ஒரு சோதனையா?
Livingston: தமிழ் சினிமாவில் இன்று பல சாதனைகளை அடைந்த நடிகர்கள் பெரும்பாலும் ஆரம்பத்தில் பல கஷ்டங்களை கடந்து வந்தவர்கள். மனதில் ஒன்று நினைத்து வரும் போது சினிமா அவர்களை வேறு மாதிரி பார்க்க ஆசைப்படும். அப்படித்தான் இன்று பெரிய பெரிய நடிகர்களின் இயக்குனர்களின் நிலைமையாக பார்க்கப்படுகிறது.
பாக்யராஜிடம் உதவியாளராக இருந்து சினிமாவிற்குள் வந்தவர்தான் லிவிங்ஸ்டன். பல ஆசைகளோடு சினிமாவிற்குள் வந்தார். அந்தக் கால எஸ்.ஜே.சூர்யா என்றே லிவிங்ஸ்டனை அழைக்கலாம். வில்லன் கதாபாத்திரத்தை நகைச்சுவை கலந்து கொடுப்பதில் வில்லவர் லிவிங்ஸ்டன்.
இதையும் படிங்க: ரசிகர்களின் கமெண்ட்டால் கடுப்பான வேல ராமமூர்த்தி… இனி ஆதி குணசேகரனே கிடையாதா..?
கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்து மக்கள் மனதில் ஒரு தனி இடம் பிடித்தார். ஹீரோவாக சுந்தர புருஷன் படத்தில் ரம்பாவுக்கே ஜோடியாக நடித்து கெத்து காட்டியவர். குணச்சித்திர கதாபாத்திரம், வில்லன் , நகைச்சுவை என அனைத்தையும் சிறப்பாக செய்து காட்டியிருக்கிறார்.
இதையும் படிங்க: பாக்கியலட்சுமி: அடேய் அப்புரசட்டிங்களா இருக்க பிரச்னையில்ல நீங்க வேறயா… கடுப்பான பாக்கியா..!
அவருடைய ஒரு மகள் இப்போது சன் டிவியில் ஒரு சீரியலில் லீடு ரோலில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் லிவிங்ஸ்டன் ஒரு பேட்டியில் அவருடைய அனுபவங்களை பற்றி பகிர்ந்திருந்தார்.
அதில் நிரூபர் ஒருவர் ‘எங்களுக்கு இருக்கிற ஒரே வருத்தம் சமீபகாலமாக லிவிங்ஸ்டனை பல படங்களில் பார்க்க முடியவில்லயே? ஏன்?’ என கேட்டார். அதற்கு லிவிங்ஸ்டன் யாரும் வாய்ப்பு கொடுக்கவில்லை என்று கூறினார்.
மேலும் அவர் கூறும் போது சினிமா இப்பொழுதெல்லாம் கார்ப்ரேட் கம்பெனி போல மாறிவிட்டது என்றும் பேன் இந்தியா என்று சொல்கிறார்கள். ஆனால் அந்தக் காலத்திலேயே பாக்யராஜ் படமே பேன் இந்தியா படமாகத்தான் வந்தது என்றும் கூறினார்.
இதையும் படிங்க: இன்ஸ்டாகிராமே சும்மா தெறிக்குது!.. சட்டை பட்டனை கழட்டி ஷார்ப்பா காட்டும் நயன்தாரா!..
மேலும் நல்ல கதைகள் இருந்தால் அதற்கேற்ற பாராட்டு கண்டிப்பாக கிடைக்கும் என்றும் நம் தமிழ் ரசிகர்கள் ரொம்ப தெளிவாக இருப்பவர்கள் என்றும் ஒரு நல்ல படம் வியாபாரம் ஆகாமல் ஒடாமல் இருந்ததில்லை.
அதே போல் ஒரு குப்பையான படம் நன்றாக ஓடி சரித்திரமே இல்லை. அதற்கு ஒரு உதாரணம் இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தை சொல்லி ஏன் அந்தப் படம் ஓடலயா? வல்ஹரான படம். வல்ஹரா இருந்தால் என்ன? நானும் அடுத்ததாக ஒரு வல்ஹரான படத்தை தான் எடுக்கப் போறேன். ரசிகர்களுக்கு எது பிடிக்குமோ அதுதான் எனக்கு பிரம்மாண்டம். படம் வெளிவந்த பிறகு பாருங்கள். யாருமே இந்தக் கதையை எடுக்க தயங்குவார்கள். ஆனால் நான் இந்த கதையை நம்பி எடுக்கப் போறேன் என்று கூறினார்.