ரசிகர்களின் கமெண்ட்டால் கடுப்பான வேல ராமமூர்த்தி… இனி ஆதி குணசேகரனே கிடையாதா..?

Published on: October 12, 2023
---Advertisement---

Ethir Neechal: எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக வேல ராமமூர்த்தி நடிக்கும் காட்சிகள் சமீபத்தில் வெளியானது. ஆனால் ரசிகர்கள் பலரும் மாரிமுத்துவை போல அவர் இல்லை என நெகட்டிவாக விமர்சனங்களே வந்தது. 

சீரியல்களிலேயே தனி அடையாளம் வாங்கிய எதிர்நீச்சலுக்கு திருஷ்டியாக அமைந்தது மாரிமுத்துவின் இறப்பு. டப்பிங் பேசிக் கொண்டு இருந்த  மாரிமுத்து திடீரென மாரடைப்பால் காலமானார். அதனால் அந்த ஆதி குணசேகரன் கேரக்டருக்கு ஆர்டிஸ்ட்டை தேடி வந்தனர். வேல ராமமூர்த்தியை நடிக்க வைக்கலாம் எனப் பேச்சுகள் எழுந்தது.

இதையும் படிங்க: கோயிந்தா கோயிந்தா!.. லியோ படம் நல்லா வசூல் ஆகணும் கோயிந்தா.. லோகேஷ் எங்கே இருக்காரு பாருங்க!..

அவர் சரியாக இருப்பார் என ரசிகர்கள் கூறிய போது சீரியல் குழு அவரையே தொடர்ந்து நாடியது. ஆனால் அவரோ நான் சினிமாவில் பிஸியாக இருக்கேன். என்னால் படப்பிடிப்பை விட்டு இப்போ வர முடியாது என கறார் காட்டினார். ஆனால் ரசிகர்களை சமாதானப்படுத்த அவருக்கு பெத்த சம்பளம் கொடுத்து அழைத்து வந்தனர்.

பல எதிர்ப்பார்ப்புகளை மீறி வேல ராமமூர்த்தியே ஆதி குணசேகரனாக எண்ட்ரி கொடுத்தார். கலகலப்பாக இருக்கும் அவர் கேரக்டருக்கு பதில் வேல ராமமூர்த்தி கோபமாகவே இருந்தார். அதிலும் அவர் மனைவி கேரக்டரை அடிக்கவும் மேலும் நெகட்டிவாக இருந்தது. 

இதையும் படிங்க: அவன் நடிச்ச படமா ஓடுச்சு.. நான் தான் ஹிட் மெஷின்.. ஹீரோவை விட அதிகமாக சம்பளம் கேட்கும் வில்லன்?

இதனால் வேல ராம்மூர்த்தியால் ஆதி குணசேகரனை வெறுத்து விடுவார்கள். மாரிமுத்துவை போல இவர் இல்லை என கமெண்ட் தட்டி வருகின்றனர். இதனால் வேல ராமமூர்த்திக்கு தனக்கு சீரியல் செட்டாகவில்லையோ எனக் கவலையில் இருக்கிறாராம். இதனால் அந்த கேரக்டரையே முடிக்கும் ஐடியாவில் இருக்கிறதாம் சீரியல் குழு.

ஆதி குணசேகரனை ஜெயிலுக்கு அனுப்பி ஜானம் மற்றும் கதிரை வைத்து ஓட்டிவிடலாம் என்ற ஐடியாவில் இருப்பதாக தெரிகிறது. இதை தொடர்ந்து இனிவரும் எபிசோட்களால் அதிரடி மாற்றம் இருக்கும். டிஆர்பியில் கூட அடி விழும் எனப் பேச்சுகள் எழுந்து வருகிறது.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.