புண்ணியவான் கொடுத்த ஒரு பேட்டி! என் மொத்த வாழ்க்கையும் போச்சு – விஷாலால் டோட்டல் வாஷ் அவுட் ஆன நடிகர்

Published on: October 12, 2023
vishal
---Advertisement---

Vishal : புரட்சித்தளபதி என தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு சிறப்பான இடத்தை பிடித்தவர் நடிகர் விஷால். விஷாலின் காட்டில் இப்பொழுது சரியான மழை என்றுதான் சொல்லவேண்டும். இனிமேல் அவர் கெரியர் அவ்ளோதான் என்று சொல்லுமளவிற்கு ரிலீஸ் ஆகும் படங்கள் எல்லாம் தோல்வியையே தழுவி வந்தன.

எதிர்பாராதவிதமாக லட்டா கையில் கிடைச்ச படம்தான் மார்க் ஆண்டனி . அந்தப் படம் இந்தளவுக்கு ரீச்சை அடையும் என படம் எடுக்கும் போது கூட நினைத்திருக்க மாட்டார். படம் ரிலீஸாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இதையும் படிங்க: என்னது அந்த மாதிரி படமா? யாரும் வாய்ப்பு கொடுக்கல! வேறு வழியும் தெரியல – இந்த நடிகருக்கு இப்படி ஒரு சோதனையா?

இந்த வெற்றிக்கு இன்னொரு காரணமாகவும் இருந்தவர் எஸ்.ஜே.சூர்யா. இருவரும் சேர்ந்து படத்தை வேறொரு தளத்திற்கு கொண்டு சென்று விட்டனர். இந்த நிலையில் விஷால் ஒரு பேட்டியில் சின்னப் படங்களை தயாரிக்கும் எண்ணத்தில் சினிமாவிற்கு வராதீர்கள் என்று சொல்லியிருப்பார்.

அவர் அன்று அளித்த பேட்டியால் ஒரு நடிகரின் கெரியரே வீணாகியிருக்கிறது. அவர் வேறு யாருமில்லை. நடிகர் லிவிங்ஸ்டன். சுந்தர புருஷன் படத்தை போன்று புதுமையான கதையை எடுக்க வேண்டும் என நினைத்து கதை, திரைக்கதை எல்லாம் எழுதிவிட்டாராம் லிவிங்ஸ்டன்.

இதையும் படிங்க: அதுதான்டா உன் வேலை!.. ஒரு மட்டு மரியாதையே தெரியல.. ஒத்த ரோசா பொண்ணை நல்லா வளர்த்துருக்கம்மா!..

ஆனால் இந்தப் படத்தை எடுக்க வந்த தயாரிப்பாளர் ஒருவர் பின்வாங்கிவிட்டாராம். அதற்கு காரணமே விஷால் அளித்த அந்த பேட்டிதான் என்று கூறினார். விஷால் ஒரு சிறந்த மனிதர் என்றும் அவர் தெரிந்து சொன்னாரா தெரியாமல் சொன்னாரா என தெரியவில்லை.

சின்ன படங்களை எடுக்க யாரும் முன்வராதீர்கள், இந்த பணத்தை கொண்டு போய் ரியல் எஸ்டேட்டில் போடுங்கள். லாபமாவது கிடைக்கும். ஏற்கனவே ஏகப்பட்ட படங்கள் கிடப்பில் இருக்கிறது. அதையும் மீறி எடுத்தால் நஷ்டம்தான் வரும் என்று விஷால் கூறியதால் இந்த தயாரிப்பாளர் வரமாட்டேன் என்று போய்விட்டாராம். அதனால் அவருடைய நிலத்தை விற்றுத்தான் அவரே இந்த படத்தை தயாரிக்கப் போகிறாராம். இதை மிகவும் வேதனையுடன் கூறினார் லிவிங்ஸ்டன்.

இதையும் படிங்க: ரசிகர்களின் கமெண்ட்டால் கடுப்பான வேல ராமமூர்த்தி… இனி ஆதி குணசேகரனே கிடையாதா..?

 

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.