Cinema History
இது நல்லா இல்ல… அட இது மோசமப்பா… எம்.எஸ்.வியையே கடுப்பாக்கிய எம்.ஜி.ஆர்… அதுக்குனு இப்டியா செய்வீங்க..!
MS Viswanathan: தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த கலைஞர்களில் முக்கியமானவர் எம்.எஸ்.விஸ்வநாதன். அவர் பாடல்களை இன்று கேட்டாலும் தேனாக இனிக்கும். அவர் மெட்டுக்கு இணை எதுவுமே இல்லை. ஆனால் எம்.ஜி.ஆர் அவர் மெட்டையே குறை சொல்லிய சம்பவமும் நடந்து இருக்கிறது.
1974ம் ஆண்டு வெளியான திரைப்படம் நேற்று… இன்று… நாளை. இப்படத்தினை நடிகர் அசோகன் தயாரித்து இருந்தார். பி.நீலகண்டன் இயக்கத்தில் எம்.ஜி.ஆருடன் மஞ்சுளா ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்துக்கு இசையமைப்பாளராக இருந்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன்.
இதையும் படிங்க: ஆமாங்க அவ லவ் பண்றா! தொடரும் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பிக்பாஸ் போட்டியாளரின் பாசமலர்
எம்.ஜி.ஆர் அப்போது பிஸியாக நடித்து வந்த காலம். எம்.எஸ்.வியும் ரொம்பவே பிரபலமாக இருந்தவர். அந்த காலத்தில் எல்லா பாடல்களும் இசையமைக்கப்பட்ட பிறகே படப்பிடிப்புக்கு செல்வார்கள்.
அதனால் முதலில் எம்.எஸ்.வியிடம் ட்யூனை அசோகன் வாங்கிக்கொண்டு நேராக எம்.ஜி.ஆரிடம் காட்டி ஓகே வாங்க வேண்டும். ஆனால் அவர் எடுத்துக்கொண்டு போன எல்லா ட்யூனுக்குமே இது நல்லா இல்ல. இது ரொம்ப மோசம் என எதாவது குறை சொல்லி தட்டி விட்டுக்கொண்டே இருந்தாராம் பொன்மனச் செம்மல்.
ஒரு பாட்டுக்கே பல ட்யூன்கள் நிராகரிக்கப்பட்டு விட சில மாதங்கள் செல்ல விஸ்வநாதனுக்கே கடுப்பாகி விட்டதாம். அசோகனை அழைத்து இனி இந்த படத்துக்கு என்னால் இசையமைத்து தர முடியாது. நீங்க வேறு இசையமைப்பாளரை பார்த்து கொள்ளுங்கள். நான் வரேன் என முடித்து கொண்டாராம்.
இந்த விஷயத்தினை அசோகன் எம்.ஜி.ஆர் காதுக்கு எடுத்து சென்று இருக்கிறார். எம்.எஸ்.வி இந்த படத்தில் இருந்து விலகி விடுவதாக கூறிவிட்டார் என்றாராம். எம்.ஜி.ஆர் இருங்க நான் பேசுறேன் எனக் கூறி விஸ்வநாதனை நேரில் சந்தித்து இருக்கிறார். அவரை காண சென்றவர். ஒவ்வொரு பாட்டுக்கு நீ போட்ட ட்யூன் அற்புதமாக இருந்துச்சுப்பா. அது அனைத்திலும் எந்த குறையும் இல்லை.
இதையும் படிங்க: தயாரிப்பாளருக்கே சமையல் செய்து கொடுத்த எம்.ஜி.ஆர்..! ஆனா இந்த ட்விஸ்ட் தான் சூப்பரே..!
ஆனால் நான் அப்போதே அதை ஓகே செய்து இருந்தால் படப்பிடிப்புக்கு உடனே கிளம்ப நேர்ந்து இருக்கும். உன்னை வைத்து சின்ன கேம் ஆடி விட்டேன். அப்போ எனக்கு கால்ஷூட் பிரச்னை இருந்தது. அதனால் தான் எல்லா ட்யூனையும் வேண்டாம் எனக் கூறி நாட்களை கடத்தினேன். இப்போ கால்ஷீட் பிரச்னை இல்லை எனக் கூறி சிரித்தாராம். என்ன குறும்பு சார் உங்களுக்கு..!