Connect with us

Cinema News

அடக்கொடுமையே!.. ரஜினி ஜோடியாக நடிச்சிட்டு இப்படி சீரியல் பக்கம் வந்துட்டாரே.. அந்த பிரபல நடிகை!..

கமல்ஹாசன், கார்த்தி, பிரபு, ராம்கி என பலருடன் ஜோடி போட்டு நடித்து வந்த எம்.ஆர். ராதா மகள் நிரோஷா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2வில் களமிறங்கி உள்ளதாக அவரே தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம் படத்தில் சூப்பர்ஸ்டார் உடன் இணைந்து நடித்துள்ளார் நிரோஷா என அப்டேட் வெளியான நிலையில், மீண்டும் சின்னத்திரை, சினிமா என பிசியான நடிகையாக மாறியுள்ளார் நிரோஷா.

இதையும் படிங்க: அச்சு அசல் தன்னை போலவே!.. அந்தரங்க வீடியோவால் அழுது புலம்பிய இளம் நடிகை.. எங்க போய் முடியப்போகுதோ?..

நடிகை ராதிகா சரத்குமாரின் தங்கையான நிரோஷா ஏற்கனவே பல சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்த நிலையில், சில ஆண்டுகள் சைலன்ட்டாக ஒதுங்கியிருந்தார். இந்நிலையில், விஜய் டிவியின் பிரபல சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் லீடு ரோலில் நடிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

இனிமேல், விஜய் டிவி ரசிகர்கள் நடிகை நிரோஷாவை தொடர்ந்து தினமும் கண்டு ரசிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. கூடிய விரைவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடங்கும் என்கிற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: லியோ கதை புதுசுன்னு நான் சொல்லவே இல்லையே!.. போட்டு தாக்கும் லோகேஷ் கனகராஜ்..

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள லால் சலாம் படத்தில் நடித்துள்ள நிரோஷா அடுத்த பொங்கலுக்கு படம் ரிலீஸ் ஆவதை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நிரோஷா நடிக்கப் போவதை அறிந்து கொண்ட ரசிகர்கள் ஆச்சர்யத்தில் ஏகப்பட்ட கமெண்டுகளை போட்டு அவரை வரவேற்று வருகின்றனர்.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top