Vinuchakkaravarthi: தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேலாக தன் ஆதிக்கத்தை செலுத்தி வருபவர் நடிகர் கமல்ஹாசன். குழந்தை நட்சத்திரமாகி அறிமுகமாகி இன்று ஒரு மாபெரும் வல்லமைப் படைத்த நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
சினிமாவின் எல்லா துறைகளையும் பிரித்து மேயக்கூடிய ஒரு அற்புதமான கலைஞர்தான் கமல்.படிப்புக் குறைவுதான் என்றாலும் தன் ஞான அறிவால் அத்தனையையும் தெரிந்து வைத்திருக்கக் கூடியவர்.
இதையும் படிங்க: தமிழ் சினிமாவின் முதல் கோடீஸ்வரர் இவர்தானாம்! கோடீஸ்வரராக்கிய அந்த திரைப்படம் எது தெரியுமா?
இலக்கியங்களை தாராளமாக பேசிக் கொண்டுவருகிறார். எத்தனையோ இயக்குனர்களுடன் பணிபுரிந்திருக்கிறார்.ஏகப்பட்ட வெற்றிப்படங்களை கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் நடிகர் வினுச்சக்கரவர்த்தி கதையிலும் கமல் நடித்திருக்கிறாராம்.
வினுச்சக்கரவர்த்தி கதையில் பாரதிராஜா இயக்கத்தில் அந்தப் படம் உருவானதாம். அந்தப் படத்தின் பெயர் டாப் டக்கர். படப்பிடிப்பு 10 நாள்கள் நகர்ந்து கொண்டிருக்க பாரதிராஜாவுக்கு அந்தக் கதையின் மீது ஆர்வம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்ததாம். ஏனெனில் அது சிகப்பு ரோஜாக்கள் சாயலில் இருந்ததாம்.
இதையும் படிங்க: பால் பப்பாளி!.. வெள்ளை தக்காளி.. பளிச்சென காட்டி பதற வைக்கும் தமன்னா.. பசங்க எல்லாம் பத்திரமா இருங்க!..
இப்படியே போனால் சரி வராது என்பதை உணர்ந்த பாரதிராஜா அதை அப்படியே டிராப் செய்து விட்டு வேறொரு கதையில் படத்தை படமாக்கினார்களாம். அந்தப் படம் தான் ‘ஒரு கைதியின் டைரி’.
இந்தப் படத்திற்கு கதை எழுதியவர் கே.பாக்யராஜ். இருந்தாலும் பாரதிராஜா ஒரு சில மாற்றங்களுடன் இந்தப் படத்தை இயக்கினார்.தந்தை – மகன் என இருவேடங்களில் கமல் நடித்து வெளியான படம் ஒரு கைதியின் டைரி.ஒரு கேரக்டரில் மிகவும் வயதான தோற்றத்தில் நடித்திருப்பார்.
இதையும் படிங்க: அடக்கொடுமையே!.. ரஜினி ஜோடியாக நடிச்சிட்டு இப்படி சீரியல் பக்கம் வந்துட்டாரே.. அந்த பிரபல நடிகை!..
அதுமட்டுமில்லாமல் இந்தப் படம் பாரதிராஜாவின் ஸ்டைலையும் தாண்டி ஒரு சில மசாலா காட்சிகளை பிரதிபலிக்கும் வகையிலும் படம் அமைந்தது.
