நடிகர்களை நம்பி இனி பிரயோஜனம் இல்ல! ‘விஷால்34’ல் மொத்தமா களமிறக்கிய ஹரி – நமக்கு வேலை ஈஸில

Published on: October 16, 2023
vishal
---Advertisement---

Vishal34:  நடிகர் விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றி நடை போட்ட படம் ‘மார்க் ஆண்டனி’. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க விஷாலுடன் இணைந்து எஸ்.ஜே.சூர்யாவும் இந்த படத்தில் இணைந்து நடித்திருந்தார். படம் மக்கள் மத்தியில் யாரும் எதிர்பார்க்காத வெற்றியை பதிவு செய்தது.

இந்த நிலையில் விஷால் அடுத்ததாக இயக்குனர் ஹரியுடன் இணைந்து தன்னுடைய 34வது படத்தில் நடித்து வருகிறார். ஹரி படம் என்றால் சொல்லவா வேண்டும்? விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் படம் பரபரப்பாக தயாராகிக் கொண்டு வருகிறது.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் அந்த விஷயத்துல கொடுத்து வச்சவரு..! பிரபல தயாரிப்பாளரிடம் புலம்பிய சிவாஜி கணேசன்..!

இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். ஏற்கனவே ஹரியின் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த யானை படத்திலும் பிரியா பவானி சங்கர்தான் ஹீரோயின் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்.ஏற்கனவே விஷாலை வைத்து பூஜை மற்றும் தாமிரபரணி போன்ற ஹிட் படங்களை கொடுத்த ஹரி இந்தப் படத்தில் மூன்றாவது முறையாக விஷாலுடன் இணைந்திருக்கிறார். அதனால் இந்தப் படத்தின் மீதும் எதிர்பார்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது.

இதையும் படிங்க: பிளான் பண்ணி என்னோட வாழ்க்கையை காலி பண்ணிட்டாங்க… விரக்தியில் சங்கமம் பட நடிகர்…

இந்த நிலையில் இந்தப் படத்தில் மேலும் இரண்டு பிரபலங்கள் இணைந்திருப்பதாக இன்று செய்திகள் வெளியானது. கௌதம் மேனன் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்களாம்.

இதன் அதிகாரப்பூர்வ தகவலை படக்குழு அறிவித்துள்ளது. அந்த வகையில் விஷால் 34ல் விஷால் மூன்று இயக்குனர்களுடன் ஒரே நேரத்தில் பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது சம்பந்தமான புகைப்படங்களை விஷால் தன்னுடைய வலைதளபக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இதையும் படிங்க: உண்மையிலேயே கர்ணனாகவே மாறிய தனுஷ்! இரவு பகல் பார்க்காமல் அண்ணனுக்காக துணிந்து இறங்கிய சம்பவம்

அதுமட்டுமில்லாமல் இதே கூட்டணி அடுத்த வருடமும் இணையும் என்பது மாதிரியான ஒரு ஹிண்டையும் கொடுத்திருந்தார் விஷால். ஒரு வேளை துப்பறிவாளன்2 படத்தில் கௌதம் மேனன் மற்றும் சமுத்திரக்கனி இணைவார்களா என்ற சந்தேகத்தை விஷாலின் இந்த பதிவின் மூலம் ஏற்படுத்தியிருக்கிறது.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.