எல்லாத்தையும் சொல்லப் போறேன்! புது அவதாரம் எடுத்து வச்சி செய்யப் போகும் நடிகை – இது வேற ரகம்

Published on: October 16, 2023
son
---Advertisement---

Actress Sona: சினிமாவைப் பொறுத்தவரைக்கும் ஆண்களுக்கு சமமாக இப்போது பெண்களும் எல்லாத் துறைகளிலும் கலக்கி வருகிறார்கள். இயக்குனராக ஒளிப்பதிவாளராக தயாரிப்பாளராக என களம் இறங்கியிருக்கிறார்கள்.

அந்த வகையில் சமீபத்தில் ஒரு நடிகை கொடுத்த அப்டேட் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தமிழில் கவர்ச்சி நடிகையாக பார்க்கப்பட்டவர் நடிகை சோனா. சிவப்பதிகாரம் படத்தில் அமைந்த ‘மன்னார்குடி கமகமக்க’ என்ற பாடலில் கவர்ச்சி நடனம் ஆடி அனைவரையும் கவர்ந்தவர்.

இதையும் படிங்க: கேப்டன் பிரபாகரன் படத்தில் நடிக்க மன்சூர் அலிகான் செஞ்ச வேலை!.. அவர் அப்பவே அப்படித்தானாம்!..

அந்தப் பாடல் மூலம் பிரபலமடைந்து தொடர்ந்து பல படங்களில் ஐட்டம் நடனத்தை ஆடிய சோனா ஒரு கட்டத்தில் கவர்ச்சியான கேரக்டர் ரோலிலும் அசத்தினார். சோனா என்றாலே கவர்ச்சி நடிகைதான் என்று அறியப்பட்டார்.

அதனாலேயே சினிமாவிலிருந்து சிறிது நாள்கள் ஒதுங்கியிருந்தார். திடீரென சீரியலில் தலை காட்ட ஆரம்பித்தார். இருந்தாலும் கவர்ச்சி நடிகை என்ற அடைமொழி அவரிடமிருந்து விலகிய பாடில்லை.

இதையும் படிங்க: லியோ அதிகாலை காட்சிக்கு அனுமதி கேட்டு தயாரிப்பாளர் செய்த வேலை!.. இது எங்க போய் முடியுமோ!…

இது சோனாவுக்கு வருத்தமாக இருந்ததாம். அதனால் திரைப்படங்களில் நல்ல கேரக்டர் ரோலுக்காக காத்துக் கொண்டிருந்தாராம். இருந்தாலும் எதிர்பார்த்தது அவ்வளவு சீக்கிரம் நடந்து விடுமா என்ன?

ஆனால் கதவு வேறு வழியாக திறக்கப்பட்டது. ஒரு நாள் சோனாவின் கதையை தொடர் கதையாக எழுத ஒரு நாளிதழ் முன்வர அந்த நாளிதழில் தொடர் கதையாக வெளியானது. அதன் பின் அந்த தொடர் கதையை புத்தகமாக வெளியிடலாம் என்ற ஐடியாவும் ஒரு சிலர் தூண்டுதலின் பேரில் செய்ய சோனா முன்வந்தார்.

அதன் விளைவு ஏன் இதை ஒரு வெப் சீரிஸாக எடுக்கக் கூடாது என்று சோனா நினைக்க இப்பொழுது அவரது பையோபிக்கை சோனாவே எழுதி இயக்கியிருக்கிறார். அந்த வெப் சீரிஸுக்கு ‘ஸ்மோக்’ என்ற தலைப்பையும் சோனா கொடுத்திருக்கிறார்.

இதையும் படிங்க: எதிர்நீச்சல்: புருஷனையே போட்டு கொடுத்த ஈஸ்வரி… ஜனனியிடம் வாங்கி கட்டிகொள்ளும் ஷக்தி…

இந்த சீரிஸ் மூலம் தன் வாழ்க்கையில் நடந்த நிறை குறைகள் என அனைத்தையும் சொல்ல இருக்கிறேன் என்று கூறினார். அதில் நிரூபர் ஒருவர் இந்த வெப் சீரிஸில் உங்கள் வாழ்க்கையில் அரசியல் தலைவர்களின் குறுக்கீடு எதுவும் இருந்து அதை பற்றி சொல்லியிருக்கிறீர்களா? என்று கேட்டார்.

அதற்கு சோனா அரசியல் தலைவர்களோ அல்லது சினிமா பிரபலங்களோ என யாரும் இதுவரை என்ன அந்த வகையில் அப்ரோச் செய்ய வில்லை. என் வாழ்க்கையில் ஆரம்பத்தில் இருந்து இன்று வரை என்ன நடந்தது என்பதை இதன் மூலம் சொல்ல இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

இந்த வெப் சீரிஸ் மூலம் நடிகை சோனா ஒரு இயக்குனராக புது அவதாரம் எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.