படுக்க வச்சே எடுக்குறான்! ஒரு வேளை தப்பான படத்துல நடிக்கிறோமோ? ராதாரவியை பயமுறுத்திய அந்த படம்

Published on: October 17, 2023
radha
---Advertisement---

Actor Radharavi: தமிழ் சினிமாவில் வில்லனாக நடித்து சிறந்த குணச்சித்திர நடிகராக தன்னை முன்னிலை படுத்திக்கொண்டவர் நடிகர் ராதாரவி. புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்ற பழமொழிக்கு ஏற்ப ஒரு நடிப்பு அரக்கனாக வாழ்ந்த எம்.ஆர்.ராதாவின் வாரிசு என்றால் சும்மாவா என்ன?

ராதாரவியின் நடிப்பும் அனைவராலும் பாராட்டப்பட்டது. தனக்கே  உரிய பாணியில் வில்லனாக தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தார். கமல் அறிமுகப்படுத்தியதின் பெயரில் மன்மதலீலை என்ற படத்தில் தோன்றிய ராதாரவி டி.ராஜேந்திரனின் உயிருள்ளவரை உஷா என்ற படத்தின் மூலம்தான் வில்லனாக அறிமுகமானார்.

இதையும் படிங்க: விஜய் என்கிட்ட சத்தியம் வாங்கிட்டுதான் நடிச்சார்!.. முக்கிய அப்டேட்டை லீக் செய்த லோகேஷ்…

தனது தந்தையை போலவே ராதாரவியும் நாடக கலையின் மீது உயிரையே வைத்திருப்பவர். தனது நடிப்பையும் நாடக மேடையில் இருந்தே ஆரம்பித்தார். சொந்தமாக நாடகக் கம்பெனியை நடத்தி வந்தார்.

இப்படி படிப்படியாக சினிமாவில் ஒரு முக்கிய நடிகராக வந்த ராதாரவி சமீபகாலமாக ஒரு சில குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.அப்படி அவர் நடித்து மக்கள் மத்தியில் பெருமளவு பேசப்பட்ட கதாபாத்திரம் பிசாசு படத்தில் அவர் ஏற்று நடித்த அப்பா கதாபாத்திரம்தான்.

இதையும் படிங்க: அத நானே எதிர்பாக்கல!.. தலைவர் 171 படம் உருவானது இப்படித்தான்!.. ரகசியம் சொன்ன லோகேஷ்..

இந்த கதாபாத்திரத்திற்கு மிஷ்கின் ஒரு நல்ல அப்பாவிற்கு  ராதாரவியை போடலாம் என்று சொன்னதும் உடன் இருந்தவர்கள் ‘ நல்ல அப்பா என்று சொல்கிறீர்கள். அதற்கு ராதாரவியை போடலாம் என்கிறீர்கள்’ என்று கேட்டார்களாம்.

அவர் படத்தில் மட்டும்தான் ரேப் சீன் மற்றும் கொடூரமாக தெரிவார். உண்மையிலேயே அவர் நல்ல அப்பாவா இருக்கமாட்டாரா? என்று தன் உதவியாளரகளுக்கு பதில் கூறிவிட்டு ராதாரவியிடம் கதையை சொல்லி ஒப்பந்தம் செய்திருக்கிறார்.

இதையும் படிங்க: ஜூம் பண்ணவே தேவையில்ல!.. நைட் டிரெஸ்ஸில் மொத்த அழகையும் காட்டும் யாஷிகா!..

நடிக்க வந்த முதல் நான்கு நாள்கள் ராதாரவிக்கு எதும் வசனங்கள் இல்லையாம். சும்மா உட்கார வைத்தும் கையை அங்குமிங்கும் வைத்தும் படுக்க வைத்துமே காட்சியை எடுத்தாராம் மிஷ்கின். இதை கவனித்துக் கொண்டிருந்த ராதாரவிக்கு ஒரு வேளை தப்பான படத்திற்கு வந்துவிட்டோமோ என்றும் பயந்தாராம்.

அதன் பிறகு தான் வசனங்கள் கொடுக்கப்பட அந்த கதாபாத்திரத்தில் பின்னி பிடலெடுத்திருப்பார் ராதாரவி என்று ஒரு பேட்டியில் மிஷ்கின் கூறியிருப்பார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.