Connect with us
tms

Cinema History

கச்சேரியில் சிவாஜி பாடலை பாட மறுத்த டி.எம்.எஸ்! அதற்கு காரணம் அவருடைய கொள்கையாம் – என்னவா இருக்கும்?

TM Soundarajan: தமிழ் சினிமாவில் எத்தனையோ பாடகர்கள் தன் குரல் வளத்தால் பல இன்னிசை பாடல்களை கொடுத்திருக்கின்றனர். ஆனால் சினிமா பாடலையும் தாண்டி ரசிகர்களிடம் பல ஆன்மீக பாடல்கள் வரவேற்பை பெறக் காரணமாக இருந்தவர் பிரபல பின்னணி பாடகரான டி.எம்.எஸ்தான்.

அவரின் குரலில் அமைந்த தெய்வீக பாடல்கள் கேட்போரை மெய்மறக்க செய்யும். அந்தளவுக்கு ஆன்மீகத்தை அவரின் குரல் மூலமாகவே வெளிக்காட்டியவர். அதுமட்டுமில்லாமல் டி.எம்.எஸும் ஆன்மீகத்தில் அதிகளவு பற்று கொண்டவர்.

இதையும் படிங்க: ‘லியோ’ படத்தில் முதல் 10 நிமிடம்! கடைசி 7 நிமிடம் – யார் வராங்க தெரியுமா? ஹைப்பை ஏற்படுத்தும் லோகிபாய்

அதே வேளையில் அவருக்கு என ஒரு கொள்கையை வைத்திருந்தாராம். அதாவது கோயில்களுக்கு கச்சேரிகளை பாட செல்வாராம் டி.எம்.எஸ். அப்படி கோயில் கச்சேரிகளில் பாடும் போது  சினிமா பாடல்களை பாடுவது இல்லை என்ற கொள்கையை வைத்திருந்தாராம் டி.எம்.எஸ்.

அப்படி ஒரு சமயம் எம்.எஸ்.வி மாரியம்மன் கோயில் கச்சேரிக்காக டி.எம்.எஸை அழைத்துச் சென்றிருக்கிறார். அப்போது எம்.எஸ்.வி டி.எம்.எஸிடம் பட்டிக்காடா பட்டணம்மா படத்தில் அமைந்த ‘என்னடி ராக்கம்மா’ பாடலை பாடக் கேட்டிருக்கிறார்.

இதையும் படிங்க: 16 வயதில் ராஜ்கிரண் எடுத்த முடிவு!. விஜயகாந்துக்கு முன்னாடியே அப்படி யோசிச்ச மனுஷன் இவர்தான்!…

ஆனால் தன் கொள்கையில் இருந்து விலகாதவராய் டி.எம்.எஸ் அந்தப் பாடலை பாட மாட்டேன் என்று மறுத்துவிட்டாராம். இத்தனைக்கும் தனக்கு வாழ்வளித்தவர் எம்.எஸ்.வி. யாராக இருந்தாலும் அவரின் கொள்கையில் இருந்து மீளாதவராய் இருந்திருக்கிறார் டி.எம்.எஸ்.

அதுமட்டுமில்லாமல் தான் குடியிருந்த தெருவில் சின்ன கொட்டகை அமைத்து அங்கு தினமும் மாலை வேளைகளில் பக்தி பாடலை பாட வேண்டும் என நினைத்தாராம் டி.எம்.எஸ். ஆனால் அதற்கு வழியில்லாமல் செய்து விட்டான் இறைவன். அவரை அழைத்துக் கொண்டு சென்று விட்டான் என இந்தப் பதிவை கூறிய சித்ரா லட்சுமணன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஏற்கனவே ஆடிய ஆட்டம் போதாதா? மீண்டும் அஜித்துடன் மல்லுக்கு நிக்கும் அந்த நடிகர் – வேகமெடுக்கும் ‘விடாமுயற்சி’

google news
Continue Reading

More in Cinema History

To Top