Connect with us
vijay

Cinema News

மாஸ்டர் படத்தை போலவே லியோ படக் காட்சிகள் இணையத்தில் லீக்!.. அதிலும், அந்த ஹைனா சீனே வந்துடுச்சே!..

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தின் பிரத்யேக காட்சிகள் தற்போது கசிந்து உள்ளதாக சோசியல் மீடியாவில் ரசிகர்கள் லியோ படத்தின் லீக்கான சீன்களை பதிவிட்டு வருகின்றனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா, சஞ்சய் தத், மற்றும் அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் நாளை காலை உலகம் முழுவதும் வெளியாகிறது.

இதையும் படிங்க: எத்தனை குண்டு போட்டாலும்.. ஜப்பானை அழிக்க முடியாது!.. ஜப்பான் டீசர் எப்படி இருக்கு?.. இதோ விமர்சனம்!..

வாரிசு திரைப்படத்தை போல படப்பிடிப்பு நடைபெறும் போதே பல காட்சிகள் கசிந்தது போல லியோ படத்தின் காட்சிகளை கடைசிவரை கசிய விடாமல் லோகேஷ் கனகராஜ் பார்த்துக் கொண்டார்.

 

மாஸ்டர் திரைப்படம் வெளியாவதற்கு ஒரு நாள் முன்னதாக பிட்டு பிட்டாக படத்தின் பல காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல தற்போது லியோ படத்தின் காட்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக லீக் ஆகி வருகிறது படக்குழுவினரை ஷாக் ஆக்கியுள்ளது.

இதையும் படிங்க: ‘லியோ’ படத்தில் முதல் 10 நிமிடம்! கடைசி 7 நிமிடம் – யார் வராங்க தெரியுமா? ஹைப்பை ஏற்படுத்தும் லோகிபாய்

காஷ்மீரில் பார்த்திபன் விஜய்யை ஹைனா ஒன்று துரத்த அவர் எப்படி தப்பிக்கிறார் என்கிற முக்கியமான ஆக்ஷன் காட்சியை தற்போது கசிந்துள்ளது.

படத்திலிருந்து காட்சி கசிந்ததா? அல்லது புரோமோஷன் வீடியோவில் இருந்த காட்சியா இது? என்கிற கேள்விகளையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். லீக்கான காட்சிகள் எல்லாம் தீயாக உள்ள நிலையில், லியோ மெகா பிளாக்பஸ்டர் அடிப்பது கன்ஃபார்ம் என ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

நாளை லியோ ரிலீஸ் ஆன உடனே டெலிகிராம் உள்ளிட்ட பல ஆன்லைன் பைரசி தளங்களில் படம் லீக் ஆகி விடும் என்றும் வெளிநாடுகளுக்கு படத்தை முன் கூட்டியே அனுப்பி உள்ள நிலையில், காட்சிகள் கசிந்திருக்கலாம் என்கின்றனர்.

google news
Continue Reading

More in Cinema News

To Top