Cinema News
ஒரு வாய்ப்பும் இல்ல!.. ஆனா லட்சக்கணக்கில் வருமானம்!.. 5 பிரபலங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்!..
சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை பலரும் புத்திசாலித்தனமாக மற்ற தொழில்களில் முதலீடு செய்வார்கள். பெரும்பாலும் நடிகர், நடிகைகள் பலரும் ஓட்டல்களை நடத்துவார்கள். சிலர் ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்வார்கள். ரஜினி, விஜய் போன்ற நடிகர்கள் திருமண மண்டபங்களை வைத்துள்ளனர். சிலர் படங்களை சொந்தமாக தயாரிப்பார்கள்.
ரஜினி வேறு சில தொழிகளிலும் முதலீடு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. நயன்தாரா கூட பல தொழில்களிலும் முதலீடு செய்துள்ளார். ஆர்யா கிழக்கு கடற்கரை சாலையில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். நடிகர் சூரி மதுரையில் ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். இயக்குனர் அமீர் கூட சமீபத்தில் காபி ஷாப் ஒன்றை திறந்தார்.
இதையும் படிங்க: கோடியை கொட்டி கொடுத்தாலும் அப்படி நடிக்க மாட்டேன்!.. ரூல்ஸ் போட்டு நடிக்கும் டாப் 5 நடிகர்கள்..
இப்படி திரைத்துறையை சார்ந்த பலரும் சினிமாவை மட்டுமே நம்பி இருக்காமல் பல தொழில்களை செய்து வருகின்றனர். அதேபோல், சினிமாவில் வாய்ப்பு இல்லை என்றாலும் வாடகைக்கு விட்டு மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் 5 பேர் பற்றி இங்கே பார்க்கபோகிறோம்.
காமெடி நடிகர் செந்திலுக்கு கோடம்பாக்கத்தில் 48 போஷன் வசிக்கும் அபார்ட்மெண்ட்டை மூலம் வாடகை மட்டும் மாதம் லட்சக்கணக்கில் வருகிறது. 80களில் முன்னணி நடிகையாக இருந்த அம்பிகா, ராதா இருவருக்கும் வளசரவாக்கத்தின் அருகே ஏ.ஆர்.எஸ். கார்டன் எனும் ஸ்டுடியோவை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: ஹீரோ மெட்டீரியல் லுக் இல்லாத நடிகர்கள்! ஆனால் படமோ பேயோட்டம் – அட யாருப்பா அவங்க?
இங்கு தொடர்ந்து சீரியல் படப்பிடிப்புகள் நடக்கிறது ஒரு சீரியலுக்கு ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை வாடகை. இதில் தினமும் அங்கு பல சீரியல்களின் படப்பிடிப்பு நடக்கும். அப்படியெனில் மாதம் வருமானம் எத்தனை லட்சம் இருக்கும் என கற்பனை செய்து கொள்ளுங்கள்.
நடிகர் சின்னி ஜெயந்துக்கு தி.நகரில் 3 அடுக்கு காம்பளக்ஸ் இருக்கிறது. இதில் மாதந்தோறும் அவருக்கு ஒரு லட்சத்துக்கும் மேல் வருமானம் வருவதாக சொல்லப்படுகிறது. அதேபோல், பிரசன்னாவும், அவரின் மனைவி சினேகவும் பெங்களூரில் பல அப்பார்ட்மெண்ட் வீடுகளை வாடகைக்கு விட்டு மாதக்கணக்கில் சம்பாதித்து வருகின்றனர். அடுத்து இயக்குனரும், சிம்புவின் அப்பாவுமான டி.ராஜேந்தருக்கு பூந்தமல்லி அருகே ஏக்கர் கணக்கில் இடம் இருக்கிறது. இங்கு சினிமா படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறுவதால் லட்சக்கணக்கில் பணம் கொட்டுகிறது.
இதையும் படிங்க: தானா வந்த மாஸ் ஹிட் படங்களை தட்டி விட்ட நடிகர்கள்… டம்மி பீஸாக மாறிய காமெடி! இதுக்கு பேரு தான் கொழுப்பு!