Cinema News
நாலு மாநிலத்திலுமே லியோவுக்கு பல்புதானாம்.. பிரபல திரை விமர்சகரின் அதிர்ச்சியான ட்வீட்..!
Leo movie: விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் திரைப்படம் தான் லியோ. இப்படத்தின் ரிலீஸ் பலகட்ட எதிர்ப்புகளை மீறி இன்று காலை திரையரங்கில் வெளியாகி விட்டது. ஆனால் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததா என பேச்சுக்கள் தான் எழுந்து இருக்கிறது.
சமூக வலைத்தளங்களில் இன்று கேட்கும் ஒரே வார்த்தை லியோ என்றுதான் இருக்கிறது. கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு மேலாகவே லியோ ரிலீஸின் எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் உருவாக்கி விட்டது. இதற்கு காரணம் ரஜினிகாந்தின் ஜெய்லர் படத்தின் ஹிட் தான்.
இதையும் படிங்க: யானைக்கும் அடி சறுக்கும்! அத மட்டும் எதிர்பார்க்காதீங்க – ‘லியோ’ பத்தி என்ன சொல்லியிருக்காங்க பாருங்க
இதனால் பல நாட்களாக இந்த படம் இப்டி இருக்குமா இல்லை இருக்காதா என பல பேச்சுக்கள் தொடர்ச்சியாக எழுந்து கொண்டே இருந்தது. கிட்டத்தட்ட ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் பொருட்டு லோகேஷ் கனகராஜ் லியோவை எல்.சியூவில் இணைத்து விட்டார் எனக் கூறப்படுகிறது.
பல ஆச்சரியங்கள் இருந்தாலும் படத்தில் ரசிகர்களுக்கு சில ஏமாற்றங்களும் நிகழ்ந்து இருக்கிறதாம். விஜய் ரசிகர்களே என்னப்பா இப்படி பண்ணிட்டீங்க என கமெண்ட் தட்டி வருகின்றனர். இதில் முதல் பகுதி கூட பெரிய அளவில் வரவேற்பை பெற்று இருக்கிறது. ஆனால் இரண்டாம் பகுதியை பலரும் கிண்டல் அடித்து வருகின்றனர்.
இதையடுத்து லோகேஷின் அசோசியேட் ரத்னகுமார் தான் இயக்கினார் எனவும் தகவல்கள் பரவியது. ஆனால் பலரும் மறுப்புகளை தெரிவித்த நிலையில் படத்தினை பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக இதை லோகேஷ் டைரக்ட் செய்யவே இல்லை என தொடர்ச்சியாக பேசி வருகின்றனர்.
இதையும் படிங்க: இனிமே என் படமாதான் இருக்கும்!. சொன்னது நீதானா?… லியோவில் விஜய்க்காக சறுக்கிய லோகேஷ்!..
இந்நிலையில் பிரபல திரை விமர்சகர் வலைப்பேச்சு அந்தணன், தன்னுடைய ட்விட்டரில் நாலா தேசத்திலும் விசாரிக்கிறேன்… நல்ல செய்தி இல்லை என கமெண்ட் தட்டி இருக்கிறார். தமிழ்நாட்டில மட்டுமல்ல எல்லா ஸ்டேட்லையுமே போச்சா என அதிர்ச்சியாக இவர் நேரடியாக லியோ தான் சொல்கிறார்.
ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி இருக்கும் #LeoDisaster மாதிரி தான் அந்தணன் சொல்கிறார் என சிலர் ஆதரவாக கமெண்ட் தட்டினர். மேலும் சிலரோ நீங்க விக்ரம் படத்தினையே மொக்கை தானே சொன்னீங்க எனக் கலாய்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.