இதுக்குதான் இவ்வளவு பில்டப்பா?!.. நடிகர்களை மொத்தமா வேஸ்ட் பண்ன லோகேஷ் கனகராஜ்!…

Published on: October 19, 2023
lokesh
---Advertisement---

Leo Review: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படம் அறிவிப்பு வெளியானது முதலே பரபரப்பை ஏற்படுத்திகொண்டே இருந்தது. முதல் செட்யூல் காஷ்மீரின் துவங்கினார்கள். காஷ்மீரில் படப்பிடிப்பா?.. அப்படின்னா லோகேஷ் ஏதோ தரமான சம்பவம் செய்ய போகிறார் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

மேலும், இப்படத்தில் அர்ஜூன் நடிப்பதாக செய்தி வந்தது. தளபதி படத்தில் ஆக்‌ஷன் கிங்குங்கு என்ன வேலை?. அப்ப கண்டிப்பா செம ஆக்‌ஷன் காட்சிகள் இருக்கும் என நினைத்தனர். அதன்பின் ஒவ்வொரு நடிகராக இந்த படத்தில் இணைந்து கொண்டே இருந்தனர். விஜய்க்கு ஜோடி திரிஷா என்றனர்.

இதையும் படிங்க: லியோ விமர்சனம்.. ஐயா லோகேஷ் இதுதான் உன் 100 சதவீதமா?.. பாவம் சார் விஜய்!

பாலிவுட் நடிகர் சஞ்சய் வில்லனாக நடிக்கிறார் என்றனர். கவுதம் மேனன் முக்கிய வேடத்தில் நடிப்பதாக சொன்னார்கள். அப்படியே மிஷ்கின், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த், சிருஷ்டி டாங்கே என பலரின் பெயரும் அடிபட்டது. ஒரு குட்டி கோடம்பாக்கமே நடித்திருப்பதாக சினிமா செய்தியாளர்கள் சொல்லி வந்தனர்.

எனவே, இப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், இந்த படத்தில் விஜய், திரிஷா கதாபாத்திரங்களை தவிர வேறு எந்த கதாபாத்திரத்திற்கும் பெரிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. மிஷ்கின், சாண்டி ஆகியோரின் அறிமுகம் அசத்தலாக இருந்தது. அதன்பின் அவர்கள் காணாமல் போய்விட்டனர். அர்ஜூன் கதாபாத்திரத்தை கூட இன்னும் கொஞ்சம் நேரம் காட்டி இருக்கலாம்.

இதையும் படிங்க: இனிமே என் படமாதான் இருக்கும்!. சொன்னது நீதானா?… லியோவில் விஜய்க்காக சறுக்கிய லோகேஷ்!..

அதேபோல், சஞ்சய் தத்தையும் செம கெத்தாக காட்டுகின்றனர். ஆனால், அவரையும் அதிகம் பயன்படுத்தவில்லை. பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் நடிப்பதாக சொல்லப்பட்டது. ஒரு காட்சியில் வந்து காமெடி செய்து விட்டு காணாமல் போய்விடுகிறார். பிரியா ஆனந்த என்ன செய்கிறார் என பார்த்தால் கவுதம் மேனனின் மனைவியாக சில காட்சிகளில் தலை காட்டுகிறார் அவ்வளவுதான்.

இவ்வளவு நடிகர்கள் நடித்திருந்தும் விஜய், திரிஷா, மன்சூர் அலிகான் ஆகிய கதாபாத்திரங்கங்கள் மட்டுமே மனதில் பதியம்படி இருப்பது லியோ படத்தை பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

இதையும் படிங்க: லியோ எல்சியூ தான்!.. ஆக்‌ஷனில் மட்டுமில்லை ஆக்டிங்கிலும் அசுரத்தனத்தை காட்டிய விஜய்.. ட்விட்டர் விமர்சனம்!

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.