Cinema History
ஆட்சி கலைந்தபோது எம்.ஜி.ஆர் செய்து கொண்டிருந்த அந்த விஷயம்!. மிஸ்டர் கூல் இவர்தான் போல!..
MGR : நாடக நடிகர், சினிமா நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என திரைத்துறையில் பிரபலமானாலும் அண்ணாவின் பேச்சில் ஈர்க்கப்பட்டு திராவிட கொள்கைகள் பிடித்து அரசியலிலும் நுழைந்தவர்தான் எம்.ஜி.ஆர். அண்ணா துவங்கிய திமுகவில் தன்னை இணைத்துகொண்டவர்.
தான் நடித்த பல திரைப்படங்களிலும் அண்ணாவின் பெருமையை வசனத்திலும், பாடல் காட்சிகளிலும் வைத்திருப்பார். அதேபோல், படத்தில் எம்.ஜி.ஆர் தங்கியிருக்கும் வீடு மற்றும் அவரின் அலுவகத்தில் கண்டிப்பாக அண்ணாவின் படம் மாட்டப்பட்டிருக்கும். எம்.ஜி.ஆரின் முகத்தை பார்த்தே மக்கள் ஓட்டு போடுவார்கள், அவர் வருகிறார் என்றால் கூட்டம் கூடும் என தெரிந்ததால் அண்ணாவும் எம்.ஜி.ஆரின் புகழை பயன்படுத்தி திமுகவை மக்களிடம் வளர்த்தார்.
இதையும் படிங்க: ஜெயலலிதா செய்ததை மறக்காத எம்.ஜி.ஆர்!.. அந்த படத்தில் வாய்ப்பு கிடைத்தது அப்படித்தான்!..
அண்ணா பங்கேற்ற பல திமுக மேடைகளில் எம்.ஜி.ஆரும் கலந்து கொண்டு பேசியிருக்கிறார். எம்.ஜி.ஆருக்கு பொருளாளர் பதவியும் கொடுக்கப்பட்டது. ஆனால், அண்ணாவின் மறைவுக்கு பின் கட்சியில் நடந்த சில விஷயங்கள் பிடிக்காமல் எம்.ஜி.ஆர் கேள்வி கேட்க அவரை கட்சியிலிருந்து கலைஞர் கருணாநிதி நீக்கினார்.
அதன்பின் எம்.ஜி.ஆர் அதிமுக எனும் கட்சியை துவங்கி தேர்தலில் போட்டியிட்டு முதல்வராகவும் மாறினார். தமிழகத்தில் தொடர்ந்து 3 முறை முதல்வராக இருந்தவர் எம்.ஜி.ஆர் மட்டுமே. சினிமாவை போலவே அரசியலிலும் அவருக்கு பல எதிரிகள் இருந்தனர். பல பிரச்சனைகளை சந்தித்து அதை சமாளித்துதான் ஆட்சியை நடத்தினார்.
இதையும் படிங்க: நான் வந்தா அது மரியாதையா இருக்காது..! கண்ணதாசன் ஊர்வலத்தில் கடுப்பான எம்.ஜி.ஆர்..
ஆனாலும், எப்போதும் பதட்டப்படாமல் நிதானமாக செயல்படுவது எம்.ஜி.ஆரின் பழக்கம். 1980ம் வருடம் பிப்ரவரி 17ம் தேதி எம்.ஜி.ஆரின் ஆட்சி சில காரணங்களால் டிஸ்மிஸ் செய்யப்பட்டது. இந்த தகவல் எம்.ஜி.ஆருக்கு ஏற்கனவே தெரியும் என்றாலும் அதை முறையாக தெரிவிக்க அதிகாரிகள் அவரின் வீட்டிக்கு சென்றனர்.
எம்.ஜி.ஆர் தொலைக்காட்சியில் தியாகராஜ பகவாதர் நடித்த ‘சிவகவி’ படத்தை பார்த்துகொண்டிருந்தார். அதிகாரிகள் அவரின் வீட்டுக்குள் போனபோது ‘வதனமோ சந்திர பிம்பமோ’ பாடல் ஓடிக்கொண்டிருக்க எம்.ஜி.ஆர் அதை ரசித்து பார்த்துக்கொண்டிருந்தாராம். வாழ்வில் எவ்வளவு பிரச்சனை வந்தாலும் எம்.ஜி.ஆர் எல்லாவற்றையும் கூலாக ஹேண்டில் செய்தார் என்பதற்கு இதுவே உதாரணம் ஆகும்.
இதையும் படிங்க: 5 ரூபாய் கடனை அடைக்க எம்.ஜி.ஆர் பட்ட பாடு!.. திருப்பி கொடுத்த தொகை எவ்வளவு தெரியுமா?!