Connect with us

Cinema News

எல்லா ரெக்கார்டும் காலி!.. நிஜமாவே நம்பர் ஒன் என நிரூபித்த விஜய்.. லியோ அதிகாரப்பூர்வ வசூல் இதோ!..

இந்த ஆண்டு வெளியான அனைத்து இந்திய படங்களின் வசூலையும் நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் முறியடித்து உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

லியோ திரைப்படத்திற்கு இதுவரை இல்லாத அளவுக்கு டிக்கெட் டிமாண்ட் நிலவி வந்த நிலையில் முதல் நாள் வசூலில் உலக சாதனை படைத்துள்ளது.

இதையும் படிங்க: கண்ட்ரோல் பண்ணி பாருங்க!.. பளிங்கு மேனியை காட்டி பாடாப்படுத்தும் ஜெயிலர் பட நடிகை…

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மடோனா சபாஸ்டியன், அனுராக் காஷ்யப், சாண்டி, பிரியா ஆனந்த், கெளதம் மேனன், மிஸ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ள லியோ திரைப்படம் உலகம் முழுவதும் முதல் நாளில் 148.5 கோடி ரூபாயை வசூல் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் தாறுமாறாக அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு வெளியான ஷாருக்கானின் பதான் மற்றும் ஜவான் முதல் நாளில் செய்த வசூல் சாதனை மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் செய்த வசூல் சாதனை என அனைத்தையும் லியோ பிரேக் செய்துள்ளது.

இதையும் படிங்க: இனிமே லோகியை நம்பி யாரும் பேட்டி கொடுத்திடாதீங்கப்பா!.. அப்புறம் செஞ்சிப்புட போறாரு..!

வாரிசு பட தயாரிப்பாளர் நம்பர் ஒன் விஜய் என சொன்னதும் பலரும் விஜய் எப்படி நம்பர் ஒன் என எகிற ஆரம்பித்த நிலையில், தற்போது நடிகர் விஜய் தான் தமிழ் சினிமாவின் வசூலில் நம்பர் ஒன் ஹீரோ என்பதை நிரூபித்துள்ளார் என்பதை ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும். சம்பவம் உறுதி என லோகேஷ் கனகராஜ் அப்படியொரு சம்பவத்தை விஜய்க்கு செய்துள்ளார்.

இந்த ஒரு அதிகாரப்பூர்வ போஸ்டர் போதும் விஜய் ரசிகர்கள் இனிமேல் ரஜினி மற்றும் அஜித் ரசிகர்களை ஓட விட்டு விடுவார்கள்.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top