Connect with us

Cinema News

எவ்ளோ வேணா தரேன்!.. எதையும் வெளியே சொல்லிடாதீங்க.. சிவகார்த்திகேயனின் டீலிங்கை அம்பலப்படுத்திய பிரபலம்?..

காமெடியனாக விஜய் டிவியில் உள்ளே புகுந்து அப்படியே ஒவ்வொரு ஷோவிலும் இடம் பிடித்து, விஜய் டிவியில் ஒரு நபராகவே மாறி பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக நடிகர்கள் மனங்களில் இடம் பிடித்து சினிமாவில் ஹீரோவாக சிறு பட்ஜெட் படங்களில் நடிக்கத் தொடங்கி இன்று முன்னணி ஹீரோக்கள் வரிசையில் தனக்கென ஒரு இடத்தை தனது கடுமையான விடாமுயற்சி மற்றும் உழைப்பால் பிடித்த சிவகார்த்திகேயன் இத்தனை ஆண்டுகளாக சேர்த்து வைத்த நம்ம வீட்டுப் பிள்ளை என்கிற பெயர் ஒரே ஒரு பேட்டி மூலம் டேமேஜ் ஆகி விட்டது.

இசையமைப்பாளர் டி. இமான் தனது வாழ்க்கையையே சிவகார்த்திகேயன் நாசம் பண்ணி விட்டார் என்றும் அவர் பண்ண துரோகத்தை இந்த ஜென்மத்தில் மன்னிக்க மாட்டேன்.

இதையும் படிங்க: மேல கொஞ்சம்.. கீழ கொஞ்சம்!.. பிட்டு துணியில் அதிரவிட்ட லியோ பட நடிகை…

இனிமேல் அவர் படங்களுக்கு இசையமைக்க மாட்டேன் என மனங்கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா மற்றும் நம்ம வீட்டுப் பிள்ளை உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்த இமான் சொன்னது தான் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

டி. இமான் பேட்டியை வைரலாக்காமால் இருட்டடிப்பு செய்ய வைக்க பல யூடியூபர்களுக்கும், மீம் கிரியேட்டர்களுக்கும் சிவகார்த்திகேயன் பல லட்ச ரூபாய் பணத்தை செலவு செய்திருப்பதாக வலைப்பேச்சு அந்தணன் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.

இதையும் படிங்க: இதனால்தான் லியோ படத்தில் நடிக்கவில்லை!.. ரிலீஸுக்கு பின் உண்மையை சொன்ன விஷால்…

டி. இமான் பேட்டி வந்ததும் அவரது மனைவி உடனடியாக வந்து சிவகார்த்திகேயனை மட்டும் காப்பாற்றும் விதமாக பேட்டி அளித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்றும் சிவகார்த்திகேயன் இந்த விவகாரத்திற்கு பணத்தை செலவழித்து இருப்பது குறித்த ஆடியோ ஆதாரமே தன்னிடம் இருப்பதாக அந்தணன் அதிர்ச்சியளித்துள்ளார்.

பிறர் மனை நோக்கக் கூடாது என்பதை சிவகார்த்திகேயன் உணரவில்லை என்றும் பெரிய தப்பு செய்து விட்டு தப்பிக்க தற்போது இப்படி பணத்தை செலவழித்து வருகிறார் என விளாசி உள்ளார்.

 

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top