Connect with us

Bigg Boss

ஒன்னு இறங்குனாலே குட்டையை குழப்பும்… இத்தனை வைல்ட் கார்ட்டா.. பிக்பாஸ் சீசன்7 அதிரடி..!

Bigg Boss Tamil: கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோக்களில் முக்கியமானது பிக்பாஸ். இது ஏழாவது சீசன் தமிழில் சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் பல புதுமையான விஷயங்களை நிகழ்ச்சி குழு அறிமுகம் செய்து இருக்கிறது.

மூன்று வாரங்களை தாண்டியும் பிக்பாஸ் தமிழ் சீசன் 7ல் வலுவான டாஸ்குகள் எதுவும் கொடுக்கப்படவில்லை. இதனால் பலரும் நிகழ்ச்சி மொக்கையாக போவதாகவே கருதினார். ஆனால் அந்த குறையை போக்க கடந்த வாரம் பிசிக்கல் டாஸ்கை இறக்கினர்.

இதையும் படிங்க: லியோவில் மகனாக நடித்தது இந்த சர்ச்சை நடிகையின் மகன் தானா..! இது என்ன புது கதையா இருக்கு..!

ஆனால் டீம் ஸ்கெட்ச் போட்டது ஒருத்தருக்கு என்றாலும் தேவையில்லாமல் கோபப்பட்ட விஜய் வர்மா எதிர்பாராமல் வெளியேறினார். கடந்த வார டாஸ்கில் விஷ்ணு, பிரதீப்பிடம் அவர் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதை ப்ரோமோவில் போட்ட போதே அவரின் வாக்கு வங்கி சரிந்தது.

அதனால் இன்னும் மிக்சர் சாப்பிட்டு கொண்டு இருக்கும் வினுஷா, அக்‌ஷயா போன்ற போட்டியாளர்களுக்கு பதில் இறங்கி விளையாண்ட விஜய் வர்மா வெளியேறி விட்டாரே என ரசிகர்களே கவலை தெரிவித்து இருக்கின்றனர். ஏற்கனவே செய்த பிரச்னை போதாத குறைக்கு இன்று ஓபன் நாமினேஷனை பிக்பாஸ் வைத்து இருக்கிறார்.

இதையும் படிங்க: ஆஸ்கார் நாயகனையே தட்டி வைத்த விஜய்… உலகளாவில் லியோ வசூல் இவ்வளவா.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

இந்த நிலையில் வரும் 29ம் தேதி பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்ட் கார்ட் எண்ட்ரி இறங்க இருக்கிறார்கள். பொதுவாக இது சஸ்பென்ஸாக இருக்கும். ஆனால் இந்த முறை ஒரு வாரம் இருக்க வீடியோவை வெளியிட்டு விட்டனர். மேலும் அது ஒருவர் இல்லையாம் 5 பேர் எனவும் கூறப்பட்டு இருக்கிறது. ஆட்டம் வெறித்தனம் தான்.

Continue Reading

More in Bigg Boss

To Top