ரசிகர்களை ஏமாற்றிய தங்கலான்!… மீண்டும் படையெடுக்கும் விக்ரம்… காரணம் இதுதானாம்!…

Published on: October 24, 2023
vikram
---Advertisement---

Actor Vikram: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சீயான் விக்ரம். இவர் என் காதல் கண்மணி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். பின் சேது, தில், தூள் போன்ற பல திரைப்படங்களின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார்.

மேலும் சாமி, அந்நியன், பிதாமகன் போன்ற பல வெற்றி திரைப்படங்களை தந்துள்ளார். மேலும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் தனது நடிப்பினை சிறப்பாக வெளிக்காட்டினார். மேலும் இவர் சமீபத்தில் நடித்து வெளியான திரைப்படம்தான் கோப்ரா. இப்படத்தில் விக்ரம் 7 கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் இப்படம் மிகப்பெரிய தோல்வியையே சந்தித்தது.

இதையும் வாசிங்க:அவர்தாங்க தொழில் சொல்லிக்கொடுத்த குருவே.. சிவகார்த்திகேயனை தொடர்ந்து தனுஷும் வசமா சிக்கிட்டாரே!..

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் இவர் நடித்த துருவ நட்சத்திரம் திரைப்படம் வரும் நவம்பர் மாதம் வெளியாக உள்ளது. இப்படம் விக்ரமின் ரசிகர்களால் நீண்ட காலம் எதிர்பார்க்கப்பட்ட  படமும் கூட. இப்படம் குறித்து விக்ரமின் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.

இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் திரைப்படம்தான் தங்கலான். இப்படத்தில் விக்ரம் தன்னை வித்தியாசமான கதாபாத்திரத்தில் காட்டியுள்ளார். இப்படத்தில் இவருடன் இணைந்து மாளவிகா மோகனன் நடித்திருக்கிறார்.

இதையும் வாசிங்க:விஜய் நடிச்சிருந்தா அந்த படம் ஓடியிருக்காது!.. பல வருடம் கழித்து லிங்குசாமி சொன்ன ரகசியம்…

கோலார் தங்க சுரங்கத்தில் நடந்த உண்மை சம்பவத்தி மையப்படுத்தி இப்படம் தயாராகி இருக்கிறது. இப்படத்தில் விக்ரம் மூன்று கதாபாத்திரத்தில்  நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாவதாக தகவல்கள் வந்தன. ஆனால் இப்படமானது பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளாதாம்.

இப்படத்தின் காட்சிகளை நடிகர் விக்ரம் பார்த்தபோது அவருக்கு ஒரு சில காட்சிகள் திருப்திகரமாய் தெரியவில்லையாம். அப்படியான காட்சிகளை விக்ரம் திரும்பவும் நடிக்க போவதாக கூறப்படுகிறது. மேலும் அதற்காக விக்ரம் மற்றும் மாளவிகா மோகனன் இருவரும் திரும்பவும் படப்பிடிப்புக்கு செல்ல போவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அதனால் இப்படம் பொங்கலுக்கு வெளியாகுமா என்பதில் சந்தேகம்தானாம்.

இதையும் வாசிங்க:திட்டினா திட்டட்டும்!.. அடுத்த வேலையை பார்ப்போம்!… அப்செட்டான விஜய்…

amutha raja

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.