Cinema History
மூன்று பெரிய நடிகர்களை திட்டி வாய்ப்பை இழந்த சந்திரபாபு!.. வாய்கொழுப்பால வாழ்க்கை போச்சே!..
Actor Chandrababu: ஒரு சுதந்திர போராட்ட வீரருக்கு பிறந்தவர்தான் சந்திரபாபு. இவரின் அப்பா சுதந்திர வீரன் என்கிற பத்திரிக்கையை நடத்தியவர். இலங்கையிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்த குடும்பம் இவருடையது. சிறுவயது முதலே சந்திரபாபுவுக்கு நடிப்பதில் அதிக ஆர்வம் ஏற்பட்டது.
1947ம் வருடம் முதல் சினிமாவில் நடிக்க துவங்கினார். ஒருகட்டத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி உள்ளிட்ட நடிகர்களின் படங்களில் நடிக்க துவங்கினார். உடலை ரப்பர் போல வளைத்து ஆடும் நடனம்.. சொந்த குரலில் பாடும் திறமை என ரசிகர்களை கவர்ந்தார். இவர் பாடிய பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட்தான்.
இதையும் படிங்க: நான் இறந்த பிறகாவது என்னை மன்னித்து 2 வரிகள் பாடு!.. கண்ணதாசனிடம் கண்கலங்கிய சந்திரபாபு..
குறிப்பாக பிறக்கும்போதும் அழுகின்றாய்… குங்குமப்பூவே கொஞ்சிப்புறாவே… புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி பெற்றதில்லை.. நானொரு முட்டாளுங்க.. உள்ளிட்ட பல பாடல்கள் காலத்தையும் தாண்டி நிற்கிறது. சந்திரபாபு எப்போதும் வெளிப்படையாக பேசுபவர். அதைவிட தன்னை விட சிறந்த நடிகர் இங்கே எவனும் இல்லை என நினைப்பவர்
சிவாஜி, ஜெமினி ஆகியோரை கூட ‘வாடா போடா’ என்றுதான் அழைப்பார். எம்.ஜி.ஆரை ‘என்ன ராமச்சந்திரன்’ என பெயர் சொல்லியே அழைப்பார். காமெடிக்கு சந்திரபாபு தேவைப்பட்டதால் அவர்கள் சந்திரபாபுவை பொறுத்துக்கொண்டார்கள். ஒருமுறை பத்திரிக்கையில் அவர் பேட்டி கொடுத்தபோது அப்போது முன்னணி இடத்தில் இருந்த எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி பற்றி உங்கள் கருத்து என கேள்வி கேட்கப்பட்டது.
இதையும் படிங்க: நான் உங்களை ‘அப்பா’ன்னு கூப்பிடவா?!.. சந்திரபாபு கேட்ட கேள்வியில் நெகிழ்ந்து போன காமராஜர்..
அதற்கு பதில் சொன்ன சந்திரபாபு 3 பேரையும் சகட்டுமேனிக்கு கிண்டலடித்து பதில் சொன்னார். சிவாஜியெல்லாம் ஒரு நடிகனே இல்லை.. எம்.ஜி.ஆருக்கு நடிக்கவே தெரியாது.. என்கிற ரேஞ்சில் அவர் பேச இது எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி ஆகியோருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதனால், தங்களின் படங்களில் சந்திரபாபு நடிப்பதை அவர்கள் விரும்பவில்லை. இதனால், சந்திரபாபுவுக்கு பட வாய்ப்புகள் குறைந்தது.
ஆனாலும், சந்திரபாபு தன்னை மாற்றிக்கொள்ளவில்லை. எம்.ஜி.ஆரை வைத்து மாடி வீட்டு ஏழை என்கிற படத்தை தயாரித்தார். சந்திரபாபு செய்த சில விஷயங்களில் கோபமான எம்.ஜி.ஆர் அப்படத்தில் நடிக்கவில்லை. இதனால் நஷ்டம் ஏற்பட்டு சொந்தமாக கட்டிய பங்களாவை இழந்தார். அதன்பின் தான் நடிக்கும் சில படங்களில் சந்திரபாபுவுக்கு வாய்ப்பு வாங்கி கொடுத்தார் எம்.ஜி.ஆர்.
ஒருகட்டத்தில், கெட்ட பழக்கவங்களால் உடல்நிலை பாதிக்கப்பட்டு சந்திரபாபு மரணமடைந்தார். மொத்தத்தில் வாய் கொழுப்பாலேயே சந்திரபாபு தனது வாழ்க்கையை தொலைத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வயிறு வலின்னு ஓடியவர் திரும்ப வரவேயில்ல… எம்ஜிஆரால் நடுத்தெருவுக்கு வந்தாரா சந்திரபாபு…?