நான் ஆட்டோக்காரன்.. ஆட்டோக்காரன்.. அட நம்ம லெஜண்ட் அண்ணாச்சியை பார்த்தீங்களா.. விஜயதசமிக்கு கலக்குறாரே!..

Published on: October 24, 2023
---Advertisement---

ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ஆட்டோக்காரர்கள் உடன் லெஜண்ட் சரவணா ஸ்டோர் ஓனர் லெஜண்ட் அண்ணாச்சி விஜயதசமியை கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.

இந்த வயதிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிப்பது போல நானும் ஏன் நடிக்கக்கூடாது என்கிற ஆர்வத்தில் தி லெஜண்ட் படத்தின் மூலம் ஹீரோவாக சரவணன் அறிமுகமானார்.

இதையும் படிங்க: மவனே பிட்டா அடிக்கிற!.. அனிருத்தை வசமாக சிக்க வைத்த ரசிகர்கள்.. ஓனருட்ட பிடிச்சு கொடுத்துட்டோம்ல!..

முதல் படமே பிரம்மாண்ட பட்ஜெட்டில் பாலிவுட் ஹீரோயின் ஊர்வசி ரவுத்தேலா, ரஜினிகாந்துக்கு வில்லனாக நடித்த சுமன், காமெடிக்கு விவேக் என பட்டாசு கிளப்பினார்.

அதனால் எதிர்பார்த்த அளவுக்கு தி லெஜண்ட் திரைப்படம் ஓடவில்லை, ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அடுத்த படத்தில் இன்னமும் தீவிரமாக நடித்து வருகிறார் லெஜண்ட் சரவணன்.

இதையும் படிங்க: சாதுவாக மாறிய ரஜினிகாந்த்… ராகவேந்திரராகவே தன்னை காட்டியதற்கு பின் இந்த ரகசியமும் இருக்காம்…

இந்நிலையில் ஆயுதபூஜை என்றாலே ஆட்டோக்காரர்கள் தான் பாட்ஷா படத்திற்கு பிறகு பலரது நினைவுக்கு வருவார்கள். அதை குறிப்பிடும் வகையில் ஆட்டோக்காரர்கள் உடன் லெஜண்ட் அண்ணாச்சி ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையை கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

மிகப்பெரிய பிரம்மாண்டமான பூமாலையை அண்ணாச்சிக்கு ஆட்டோக்காரர்கள் அணிவிக்கும் புகைப்படம், மற்றும் ஆட்டோக்காரர்கள் உடன் ஏழை பங்காளனாக போஸ் கொடுத்து நிற்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: அவர்தாங்க தொழில் சொல்லிக்கொடுத்த குருவே.. சிவகார்த்திகேயனை தொடர்ந்து தனுஷும் வசமா சிக்கிட்டாரே!..

”ஆட்டோ தொழிலாளர்களுடன் விஜயதசமி கொண்டாடிய மகிழ்ச்சியான தருணம்…” என அந்த புகைப்படங்களை வெளியிட்டு கேப்ஷன் கொடுத்துள்ளார்.

தி லெஜன்ட் சரவணா ஸ்டோர் ஓனர் தனது கடை தொழிலாளிகளுடன் ஆயுதபூஜை கொண்டாடுவார் என்று பார்த்தால் பாட்ஷா படத்தில் வருவது போல மாணிக்கம் ரஜினியாக மாறி விட்டாரே என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

 

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.