ரஜினி கொடுத்த சூப்பர் லைஃப் கெடுத்துக்காதீங்க…! அதிரடியாக கைது செய்யப்பட்ட ’வர்மா’ விநாயகன்..!

Published on: October 24, 2023
---Advertisement---

Vinayakan: ரஜினிகாந்தின் மாஸ் ஹிட் படமான ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்து தனக்கென ஒரு அங்கீகாரத்தினை உருவாக்கியவர் நடிகர் விநாயகன். புகழ் ஏறும் போது புத்தி மாறிடும் என்ற வாக்கியத்துக்கு மிக சரியாக ஒரு வேலையை செய்து மீண்டும் ட்ரெண்ட்டிங்கில் வந்து இருக்கிறார்.

ரஜினிக்கு வில்லனாக விநாயகன் செட்டாவாரா என்ற சந்தேகம் பலருக்கும் முதல் காட்சியில் இருக்கும். பெரிய வில்லன் வருவார் என்ற எதிர்பார்ப்பே இருந்தது. ஆனால் க்ளைமேக்ஸில் அவர் நடிப்பு மிரட்டலாக இருக்க இவர் தான் சரியான ஆள் எனச் சொல்லி சென்றவர்கள் தான் அதிகம். மலையாளத்தில் கம்மாட்டிபடத்தில் நடித்தவர் விநாயகன். முதல் படமே பெரிய ஹிட்டாக அமைந்தது.

இதையும் படிங்க: விஜயதசமி அதுவுமா இது தேவையா? – சர்ச்சையை கிளப்பிய நயன்தாரா பட டீசர்..

தொடர்ந்து திமிரு படத்தில் ஒரு சின்ன வேடம் கிடைத்தது. அப்போதே பலரை தன் பக்கம் ஈர்த்தவர் விநாயகன். அதற்கடுத்து சிலம்பாட்டம், எல்லாம் அவன் செயல், காளை, சிறுத்தை, மரியான் படங்களில் நடித்தவருக்கு அதன் பின்னர் தமிழ் சினிமா வாய்ப்பே கிடைக்கவில்லை.

கிட்டத்தட்ட 10 வருட இடைவேளைக்கு பின்னர் ஜெயிலர் படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தார். மிகப்பெரிய சம்பளத்தில் அவர் நடிப்புகாகவே நெல்சன் திலீப்குமார் அழைத்து வந்ததாக தெரிவித்தார். அவரின் வர்மா கதாபாத்திரம் பலருக்கு வாவ் சொல்லும் ரகமாகவே இருந்தது.

இந்நிலையில் வர்மா புகழ் விநாயகனை போலீசார் தற்போது கைது செய்து இருக்கின்றனர். கேரள மாநிலத்தின் எர்ணாகுளத்தில் குடிபோதையில் தகராறு செய்ததாக விநாயகனை போலீசார் கைது செய்துள்ள செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மவனே பிட்டா அடிக்கிற!.. அனிருத்தை வசமாக சிக்க வைத்த ரசிகர்கள்.. ஓனருட்ட பிடிச்சு கொடுத்துட்டோம்ல!..

உள்ளூர் காவல் நிலையத்துக்குள் புகுந்து காவல் துறை அதிகாரிகளுக்கு விநாயகன் தொந்தரவு கொடுத்ததால் தான் அவர் மீது இந்த கைது நடவடிக்கை எனக் கூறப்படுகிறது. இன்று தான் அவர் வில்லனாக நடிக்கும் துருவ நட்சத்திரம் படத்தின் டிரைலர் ரிலீஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.