திருட்டு கதையில் நடித்து திணறிய பிரபுதேவா..! கடைசியில் சூப்பர்ஸ்டார் உதவியால் எஸ்கேப் ஆன சம்பவம்..!

Published on: October 26, 2023
---Advertisement---

Prabhudeva: தமிழ் சினிமாவில் எத்தனை மாஸ் ஹிட் கதைகளை எடுத்தாலும் கூட திருடி எடுக்கும் கதைகளும், ட்யூன்களும் அவ்வப்போது நடக்கும் பிரச்னையாக தான் இருக்கிறது. இதில் ஒரு நடிகர் மிகப்பெரிய பிரச்னையே சந்தித்தாராம்.

நடன இயக்குனராக இருந்தவர் பிரபுதேவா. காதலன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அந்த படமே மிகப்பெரிய ஹிட்டாக அமைந்தது. முதல் படத்திலேயே நடிகராக அங்கீகரிக்கப்பட்டார். தொடர்ச்சியாக அவர் நடிப்பில் வெளியான ராசையா, மிஸ்டர் ரோமியோ படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி படமாக அமைந்தது.

இதனால் நடன இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் தன்னுடைய கேரியரை வளர்த்து கொண்டார். தொடர்ச்சியாக பல படங்களில் நாயகனாக நடித்து ஹிட்டும் கொடுத்தவர். அவர் நடிப்பில் தேவி படம் மிகப்பெரிய ஹிட்டாக அமைந்தது.

இதையும் படிங்க: அட பைத்தியமே..! அவனுக்கு குழந்தையே இருக்கு..! நீ என்னனா லவ் பண்ணுனு டார்ச்சர் பண்ணிட்டு இருக்க..!

அதன்பின்னர் பிரபுதேவாவால் சரியான ஹிட்டை கொடுக்கவே முடியவில்லை. ஹரிக்குமார் இயக்கத்தில் இவர் நடித்த தேள் படம் இவர் வாழ்க்கையையே புரட்டி போடும் அளவுக்கு பிரச்னையை கொண்டு வந்தது. தேன் படத்தின் கதை கொரியன் பிட்டா படத்தின் அப்பட்டமான காப்பியாம்.

இதை அறிந்த அந்த படத்தின் குழு நேரடியாக தேள் படகுழுவை சாடி நஷ்ட ஈடாக 18 கோடி ரூபாயை அபராதமாக கேட்டனர். ஆனால் தேள் படம் 17 லட்சம் கூட வருமானம் செய்யவில்லை. இதனால் செய்வதறியாமல் நின்ற பிரபுதேவாவுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லையாம்.

நேரடியாக போய் பேசி பார்த்தும் அவர்கள் சமாதானம் ஆகவே இல்லையாம். அதனால் பாலிவுட் பட உலகின் சூப்பர்ஸ்டாராக சல்மான்கானிடம் இந்த விஷயத்தினை குறித்து கூறி இருக்கிறார். உடனே அவரே இந்த விஷயத்தில் களமிறங்கினாராம்.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயன் தப்பு செய்யாமையா அமைதியா இருக்காரு… மறுப்பு சொல்லணும்ல… இமானை மிரட்டலாமா?

அவர் பிட்டா படக்குழுவிடம் நேரடியாக பேசி 1.5 கோடி வரை அபராதம் கட்டி தப்பி வந்து இருக்கின்றனர். இப்படி தான் தற்போது அனிருத்தால் லியோ படக்குழு எவ்வளவு அபராதம் கட்டும் என திரை உலகம் எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர் எனக் கூறப்படுகிறது.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.